சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்த 1 இளம்பெண் உட்பட 6 நபர்கள் கைது

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல்ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் போதை தடுப்புக்கானநடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளஉத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணைஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலானதனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாககண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்துநடவடிக்கை எடுத்து வருகின்றனர்இதன் தொடர்ச்சியாக R-2 கோடம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலானகாவல் குழுவினர் நேற்று (17.03.2022) கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் மைதானம் அருகில்கண்காணித்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணைசெய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்கள்வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, டைடல் மற்றும் நைட்ரவிட் உள்ளிட்டஉடல்வலி நிவாரண மாத்திரைகள் பெருமளவு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 1.கிஷோர், வ/23, தி/பெ.கோபிநாத், 1வது தெரு, புதூர், அசோக்நகர், சென்னை, 2.கிஷோர்குமார், வ/20, த/பெ.ராஜன், ராணி அண்ணாநகர், கே.கே.நகர், சென்னை ஆகிய இருவரை கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு, மேற்படிகுற்றவாளிகளுடன் தொடர்புடைய 3.பூங்குன்றன், வ/26, த/பெ.கமலகண்ணன், கந்தப்பாசெட்டி தெரு, கொத்தவால்சாவடி, சென்னை, 4.முத்துபாண்டி, வ/23, த/பெ.புதியராஜ், எம்.ஆர்.நகர், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம், 5.கோகுலன், வ/24, த/பெ.சிவராமன், கடமலைகுண்டு, ஆண்டிப்பட்டி மாவட்டம், தேனி மாவட்டம், 6.ராஜலஷ்மி (எ) மித்ரா, பெ/.22, த/பெ.கணேஷ்,பவானி அம்மன் கோயில் தெரு, கந்தசாமி நகர், பூந்தமல்லி ஆகிய 4 நபர்களை கைது செய்தனர்கைது செய்யப்பட்ட 1 பெண் உட்பட 6 நபர்களிடமிருந்து 4,620 நைட்ரவிட் (Nitravet) மாத்திரைகள், 2,220 டைடல் (Tydol), 145 UNWANTED KIT மாத்திரைகள், 140 ALPRASAFE மாத்திரைகள் என மொத்தம் 7,125 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 2 லேப்டாப், 1 ஐபேட், 9 செல்போன்கள், ரொக்கம் ரூ.4,41,300/- மற்றும் 3 இருசக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுவிசாரணையில் மேற்படி எதிரிகள் வெளிமாநிலத்தலிருந்து கொரியர் மூலம் உடல்வலிநிவாரண மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, சென்னை உட்பட தமிழகம் முழுவதும்கொரியர் மற்றும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்ததுகைது செய்யப்பட்ட 6 நபர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில், விசாரணைக்குப் பின்னர் 6 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பஉள்ளனர்.