சென்னையில் போக்குவரத்து அழைப்பு மையத்தை ஆணையர் துவக்கி வைத்தார்

சென்னை பெருநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தாமல் நிலுவையில் உள்ள வாகன ஓட்டிகளுக்காக, சென்னை பெருநகரில் 10 இடங்களில், 10 போக்குவரத்து உதவி ஆணையாளர்கள் தலைமையில், போக்குவரத்து அழைப்பு மையங்களை துவக்கும் அடையாளமாக, சென்னை பெருநகர காவல்ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (11.04.2022) G-1 வேப்பேரி காவல்நிலைய வளாகத்தில் உள்ள போக்குவரத்து காவல் அழைப்பு மையத்தை திறந்து வைத்தார். 

வாகன ஓட்டிகள் ஸ்பாட் ஃபைன் தொகையை செலுத்த ஏதுவாக, இந்திய அரசின் MoRTHன் டிஜிட்டல் போக்குவரத்து அமலாக்க தீர்வு முயற்சியான “E-challanமென்பொருளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, 10.05.2018 அன்று ரொக்கமில்லா இ-சலான் கட்டண முறையை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்தியது. இந்த முறையின் வாயிலாக சட்டத்தை மீறுபவர்கள் அபராதத் தொகையை கிரெடிட்/டெபிட் கார்டு மூலமாகவோ அல்லது ஆன்லைன் பேங்கிங், பேடிஎம், டிஎன் இ-சேவை மையங்கள், தபால் அலுவலகம் அல்லது நீதிமன்றம் மூலமாகவோ செலுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். 

ஆரம்பத்தில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​91.7% போக்குவரத்து விதிகளைமீறுபவர்கள் பல்வேறு முறைகள் மூலம் அபராதத் தொகையை செலுத்தினர். தற்போது நிலுவையில்சலான்களுக்கான அபராதத் தொகையை வாகன ஓட்டிகள் செலுத்தாமல் இருக்கும் போக்குஅதிகரித்து வருகிறது. இது தவிர காண்டாக்ட்லெஸ் அமலாக்கத்தின் (CCTV கேமரா, TROZ சிஸ்டம் போன்றவை) மூலம் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன, பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக உருவாக்கப்பட்ட -சலான்கள் பற்றி தெரியாது. இதனால் ஸ்பாட் ஃபைன் தொகை 20% ஆகக் சரிந்துள்ளது. 

எனவே, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு உரிய நிலுவையில் உள்ள -சலான்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு வசதியாக, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையானது, கீழ்கண்ட 10 இடங்களில் போக்குவரத்து காவல் அழைப்பு மைய வசதிகளைத்11.04.2022 முதல் தொடங்கியுள்ளது. 

 

S.No.

Sub- division

Location

Strength

Call Center Contact Number

1.

T.Nagar

R 1 Mambalam Tr PS

1 SI  & 2 ors

044-23452610

2.

Adyar

J 2 Adyar Tr PS

1 SI  & 2 ors

044-23452588

3.

St.ThomasMount

AC Mount, Tr office

1 SI  & 2 ors

044-23452763

4.

Kilpauk

G 1 Vepery Tr PS

1 SI  & 2 ors

044-23452695

5.

Mylapore

D 5 Marina Tr PS 2nd Floor

1 SI  & 2 ors

044-23452564

6.

Triplicane

F 4 Thousand Light Tr PS 2ndFloor

1 SI  & 2 ors

044-23452664

7.

Anna Nagar

K 8 Arumbakkam Tr PS 2ndFloor

1 SI  & 2 ors

044-23452721

8.

Flower Bazaar

C 2 Elephant gate Tr PS

1 SI  & 2 ors

044-23452469

9.

Washermenpet

H 5 Washermenpet Tr PS 2ndFloor

1 SI  & 2 ors

044-23452492

10.

Pulianthope

K 1 Sembium Tr PS 2nd Floor

1 SI  & 2 ors

044-23452712

மேலே உள்ள போக்குவரத்து அழைப்பு மையங்கள் கணினி, தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகளுடன் செயல்பட உள்ளன. மேலும் அவை தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை பின்வரும் வசதிகளுடன் செயல்படும்.

வாகன ஓட்டிகளின் அலைபேசி எண்ணில் அழைத்து, நிலுவையில் உள்ள மின்-சலான்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கவும்.
வாகன ஓட்டிகளுக்கு நிலுவையில் உள்ள சலான்களை மொத்தமாக குறுஞ்செய்தி மூலம்அனுப்பப்படும்.
நிலுவையில் உள்ள மின்-சலான்கள், அபராதத் தொகைகள் போன்றவற்றை தொலைபேசியிலும், நேரிலும் பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்கும்.

மேற்கூறியவற்றைத் தவிர, வாகன ஓட்டிகள் தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள அனைத்து மின்-சலான்களின் விவரங்களையும் பின்வரும் இணையதளத்தில் வாயிலாக பெறலாம்.

https://echallan.parivahan.gov.in/index/accused-challan

எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களுக்கு/தங்கள் வாகனத்திற்கு எதிராக நிலுவையில் உள்ள -சலான்களின் விவரங்களைச் சரிபார்த்து, அபராதத் தொகையை பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2. Paytm App
3. Post Office
4. Tamil Nadu E-Sevai Centers
5. Court

நிலுவையில் உள்ள சலான்களைச் சரிபார்த்து, அபராதத் தொகையை மேற்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் செலுத்துவதற்கு வாகன ஓட்டிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. ஒரு வாரத்திற்குப் பிறகு நிலுவையில் உள்ள                     -சலான்களை செலுத்தத் தவறினால், விதிமீறல்கள் மெய்நிகர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு அதிக அபராதத்தொகை செலுத்த நேரிடும் என்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

எனவே வாகன ஓட்டிகள் தங்களது ஒத்துழைப்பை வழங்கி நிலுவையில் உள்ள இ-சலான்களை ஒரு வார காலத்திற்குள் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.