1. யானைகவுனி பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த கணவன் மனைவியை கைது செய்துசுமார் 26.7 கிலோ கஞ்சா, 1 கிலோ கஞ்சா ஆயில், 2 செல்போன்கள் மற்றும் 1 காரைபறிமுதல் செய்த போலீசாருக்கு பாராட்டு.
சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive Against Drugs)மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாககண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்துநடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, C-2 யானைகவுனி காவல் நிலைய ஆய்வாளர் திரு.T.வீரகுமார்தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.P.விஸ்வநாதன், தலைமைக்காவலர்கள் திரு.T.பூபதி, (த.கா.எண்.18779), திரு.R.கார்த்திகேயன், (த.கா.27017) திரு.சுரேஷ் (த.கா.20438), முதல்நிலைக்காவலர்கள் திரு.A.கமேஷ், (மு.நி.கா 44939), திரு.L.பள்ளிகொண்ட பெருமாள், (மு.நி.கா.31154) காவலர் திரு.P.மாரியப்பன், (கா 48738) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 22.04.2022 வால்டாக்ஸ் ரோடு, NSC போஸ்சாலை சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த காரை நிறுத்திவிசாரணை செய்தபோது, காரில் வந்த கணவன் மனைவி ஆகிய இருவரும் முன்னுக்குப் பின் முரணாகபதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், காரை சோதனை செய்தபோது, காரில் கஞ்சா மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில் சட்டவிரோதமாக காரில் கஞ்சா கடத்தி வந்த 1.முகமது நௌசத் அலி, வ/35, த/பெ.காதர் அலி, எண்.17/1, பாலவிநாயகர் கோயில் தெரு, முத்தியால்பேட்டை, சென்னை அவரதுமனைவி ஆயிஷா, வ/23, க/பெ.முகமது நௌசத் அலி ஆகிய இருவரை கைது செய்து சிறையில்அடைத்தனர். அவர்களிடமிருந்து சுமார் 26.7 கிலோ எடை கொண்ட கஞ்சா, 1 லிட்டர் கஞ்சா ஆயில், 2 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மற்றும் 1 கார் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டது.
2.யானைகவுனி பகுதியில் சட்டவிரோதமாக காரில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்களை கைது செய்து 60 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் 1 காரை பறிமுதல் செய்தபோலீசாருக்கு பாராட்டு .வடக்கு மண்டல இணை ஆணையாளர் அவர்களின் தனிப்படையில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்திரு.S.விஜய், முதல் நிலைக்காவலர் திரு.B.சதாசிவம், (மு.நி.கா.31592) திரு.K.முத்துகுமரன்(கா.எண்.41947) திரு.P.முகமது காட்டுபாவா, (கா.எண்.51278) ஆகியோர அடங்கிய தனிப்படை காவல்குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 30.04.2022 அன்று மதியம், வால்டாக்ஸ் சாலை மற்றும் திருப்பள்ளி தெரு சந்திப்பில் கண்காணித்தபோது, அவ்வழியேசந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தி விசாரணை செய்தபோது, காரில் வந்த 3 நபர்களும்முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், காரை சோதனை செய்தபோது, காரில் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில் மூவரையும் கைதுசெய்து C-2 யானை கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.மோகன்குமார், வ/41, த/பெ.துரை, நாயக்கர்புது 3வது தெரு, திண்டுக்கல் மாவட்டம், 2.ஸ்டான்லி, வ/26, த/பெ.ஜான் கென்னடி, அரளிக்காடு, சிறுமலை, திண்டுக்கல் மாவட்டம்,3.பேருரி ஶ்ரீனு, வ/33, த/பெ.பேருரி சத்யநாராயணன், பெருமள்ளாபுரம், கோன காடு, கிழக்கு கோதாவரி, ஆந்திர மாநிலம் என்பது தெரியவந்தது.அவர்களிடமிருந்து 60 கிலோ எடை கொண்ட கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்குபயன்படுத்திய TATA Sumo Grandi கார் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் மேற்படி நபர்கள் ஆத்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
3. வியாசர்பாடி பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ஆப்பிள் ஐ–போன், ஸ்மார்ட் வாட்ச், செக்புக் அடங்கிய கைப்பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த தலைமைக்காவலருக்குபாராட்டு.
P-3 வியாசர்பாடி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக்காவலர்திரு.R.விமல்குமார் (த.கா.27613) கடந்த 23.04.2022 அன்று இரவு வியாசர்பாடி, கணேசபுரம்பாயிண்டில் பணியிலிருந்து போது, அவ்வழியே சென்ற இளைஞர் ஒருவர் சாலையில் கேட்பாரற்றுகிடந்த கைப்பையை எடுத்து மேற்படி தலைமைக்காவலரிடம் ஒப்படைத்துள்ளார். தலைமைக்காவலர்விமல்குமார் கைப்பையை திறந்து பார்த்த போது, அதில் விலையுயர்ந்த ஆப்பிள் ஐ–போன், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இரண்டு செக் புக்குகள் இருந்துள்ளது. தலைமைக்காவலர் உடனே செக்புக்கிலிருந்தகைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசி, கைப்பையை தவறவிட்ட பெண்ணின் கணவரை நேரில்வரவழைத்து அவரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார். கைப்பையை பெற்றுக்கொண்ட பெண்ணின்கணவர் சென்னை போலீசாரை பாராட்டி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்
4.மதுரவாயல் பகுதியில் சாலையில் சிதறிக்கிடந்த கான்கீரிட் கலவையை அப்புறப்படுத்திபோக்குவரத்து சீராக செல்வதற்கு உதவி புரிந்த தலைமைக்காவலருக்கு பாராட்டு.
T-4 மதுரவாயல் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரியும. தலைமைக்காவலர் திரு.B.கார்த்திகேயன் (த.கா.36698) என்பவர் கடந்த 01.05.2022 அன்றுமதுரவாயல் மார்கெட் பாயிண்ட் அருகே பணியிலிருந்த போது, சாலையில் கான்கீரிட் கலவை சிதறிகிடந்ததால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிரமபடுவதை கண்டு, தலைமைக்காவலர் சிறிதும்தாமதிக்காமல் உடனே சாலையில் சிதறிக்கிடந்த கான்கீரிட் கலவையை அங்கிருந்துஅப்புறப்படுத்தியுள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சாலையில் பயணிக்க முடிந்தது. போக்குவரத்து தலைமைக்காவலரின் இப்பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
5. தேனாம்பேட்டை பகுதில் இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்களை கைது செய்து 10.7 கிலோ கஞ்சா, ரொக்கம் ரூ.3,300/- மற்றும் 2 இரு சக்கரவாகனங்களை பறிமுதல் செய்த போலீசாருக்கு பாராட்டு.
E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திரு.M.சக்திவேல்(மு.நி.கா.57913), ஆயுதப்படைக்காவலர் திரு.P.சௌந்தரராஜன் ஆகிய இருவரும் கடந்த 26.04.2022 அன்று தேனாம்பேட்டை, கஸ்தூரிரங்கன் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது,இருசக்கர வாகனங்களில் சட்ட விரோதமாக கஞ்சா எடுத்து வந்த 1.ஹரி, வ/33, த/பெ.முகுந்தன், எண்.22, 6வது தெரு,அமுதம் நகர், கொடுங்கையூர், சென்னை 2.முகமது உசேன் அலி, வ/20, த/பெ.ஜாகீர் உசேன், எண்.20/43, மரக்காயர் லப்பை தெரு, மண்ணடி, சென்னை 3.ஜெயந்தர்ராஜ், வ/19, த/பெ.ஶ்ரீதர், எண்.1, சாலை விநாயகர் கோயில் தெரு, மண்ணடி, சென்னை ஆகிய மூவரை கைதுசெய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்களிடமிருந்து 10.7 கிலோ கஞ்சா, ரொக்கம் ரூ.3,300/- மற்றும் 2 இருசக்கர வாகனங்கள்பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக பணிபுரிந்த மேற்படி 16 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் (07.05.2022) நேரில்அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.