இன்றைய சூழ்நிலையில் ஒலி மாசுபாடு என்பது உலகில் ஒரு நாட்டில் உள்ள அனைத்துகுடிமக்களையும் பாதிக்கும் கடுமையான விஷயம் ஆகும். ஆரோக்கியமான சத்தம் பகலில் 55 டெசிபல்களையும் இரவில் 40 டெசிபலையும் தாண்டக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஒலி மாசுபாட்டின் மிகவும் பொதுவான ஆதாரம் மோட்டார் வாகனத்தின் ஹாரன்ஆகும். ஒலி எழுப்பும் வழக்குகள்; கடத்தும் மற்றும் உணர்திறன். இது எரிச்சல் மற்றும் ஆக்கிரமிப்பு, உயர் பதற்றம், அதிக மன அழுத்தம், தூக்கமின்மை, இதய நோய், மனநோய் போன்ற உடல்நலப்பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. ‘நோ ஹான்கிங்’ என்பது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்ட சிறப்புஇயக்கமாகும், இது தொடர்ச்சியான மற்றும் தேவையற்ற ஹார்ன் அடிப்பதால் ஏற்படும் விளைவுகள்குறித்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒலி மாசுபாடுமட்டுமின்றி, சாலை விபத்துக்களுக்கும் வழிவகுக்கும், ஹாரன் அடிப்பதால் ஏற்படும் தீமைகள்குறித்து, ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு அறிவுரை வழங்கவும் இந்தஇயக்கத்தின் நோக்கமாக உள்ளது. ஒலி சத்தம் எழுப்பாமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பெருநகர சென்னைபோக்குவரத்துக் காவலர்கள் 27.06.2022 முதல் 03.07.2022 வரை ஒலி எழுப்பாமை விழிப்புணர்வுவாரத்தைக் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது*********
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப. இன்று(27.06.2022) காலை 11.00 மணிக்கு, அசோக் நகர், அசோக் பில்லர் அருகில் ஒலி மாசு விழிப்புணர்வுவாரத்தை (No Honking awareness week) துவக்கி வைத்து, வாகனங்களில் தேவையற்ற இடங்களில்ஹாரன்கள் ஒலிப்பதால் ஏற்படும் ஒலி மாசு குறித்த போக்குவரத்து விழிப்புணர்வு முகாமினை துவக்கிவைத்தார். பின்னர் நண்பகல் 12.15 மணியளவில், வேப்பேரி காவல் ஆணையரகம் அருகில், ஈ.வெ.ரா.சாலை – ஈ.வி.கே.சம்பத் சாலை சந்திப்பிலுள்ள சிக்னலில், போக்குவரத்து பிரச்சாரவாகனத்தின் (Traffic Propoganda Vehicle) இயக்கத்தை துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களுடன் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன்விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் போக்குவரத்து கபில்குமார் சி சரத்கர், இ.கா.ப, போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.
இன்று (27.06.2022) முதல் 03.07.2022 வரை சென்னை நகரின் பல்வேறு சந்திப்புகளில்பின்வரும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒலி எழுப்பும் முன் அது அவசியம்தானா என யோசியுங்கள் பெரும்பாலும் அது அவசியம்இல்லை என்று நீங்கள் உணர்வீர்கள்.