இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று காவலர் “வீர வணக்க நாள்“ அனுசரிக்கப்படுகிறது. அதன்பேரில், கடந்த 21.10.2021 அன்று தமிழக காவல்துறை தலைமைஇயக்குநர் அலுவலக வளாகத்தில், காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு, பணியின்போது இறந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தி, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.
காவலர் வீர வணக்கநாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும்அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், 21.10.2021 முதல்31.10.2021 வரையிலான 11 நாட்கள் “காவலர் வீர வணக்க வாரமாக” (Police Commemoration Week) கடைபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பணியின்போது உயிர்தியாகம் செய்த காவல் துறையினரின் திருவுருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்துதல், காவல்துறையினரின் பணிகள் மற்றும் வீரதீர செயல்கள் புரிந்து உயிர் தியாகம் செய்தகாவல்துறையினர் குறித்த கண்காட்சியகங்கள், நாடகங்கள், காவல் வாத்திய குழுவினரின் இசைநிகழ்ச்சிகள், மினி மாரத்தான் போட்டிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள், ஓவிய போட்டிகள், எழுத்து போட்டிகள், சைக்கிள் பேரணி என பல்வேறு விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக,’’காவலர் வீர வணக்க வாரத்தை’’ முன்னிட்டு, இன்று (23.10.2021) மாலை, புளியந்தோப்பு காவல் மாவட்டம் சார்பில், பெரம்பூரிலுள்ள செவாலியர் புனித தாமஸ்எலிசபெத் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு, சென்னைபெருநகர காவல் துறையில் பணியின்போது உயிர் தியாகம் செய்த காவலர்கள் மற்றும்கொரோனா பேரிடர் காலத்தில், பொதுமக்களின் உயிர் காக்கும் முன்கள பணியாற்றி, உயிர்தியாகம் செய்த காவலர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர்’’தேசிய கட்டமைப்பில் காவல்துறையின் பங்கு முக்கியமானதே,! முக்கியமற்றதே!’’ என்றதலைப்பில் விவாத மன்றத்தை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். கவிஞர் சாக்கன்வெ.காமராஜ், கல்லூரி பேராசிரியர், ராணிபேட்டை நடுவராக இந்த விவாத மன்றத்தில் கலந்துகொண்டு, கல்லூரி மாணவ, மாணவிகள் காவல்துறையினரின் கடினமான பணிகள், ஈகை குணம்குறித்து எடுத்துரைத்தனர். மேலும், காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, கானா பாடகர் பாலாகாவல்துறை வீரர்களின் தியாகம் குறித்த பாடலை பாடினார்.
இந்நிகழ்ச்சியில், காவல் கூடுதல் ஆணையாளர்கள் திரு.T.செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு), முனைவர் J.லோகநாதன், இ.கா.ப, (தலைமையிடம்), மேற்கு மண்டல இணைஆணையாளர் திருமதி.S.ராஜேஸ்வரி, இ.கா.ப., துணை ஆணையாளர்கள் திரு.S.ராஜேஷ்கண்ணா, இ.கா.ப, (புளியந்தோப்பு), தீபா கனிகர், இ.கா.ப., (அண்ணாநகர்) எம்.கே.பி.நகர்சரக உதவி ஆணையாளர் திரு.தமிழ்வாணன், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், சுமார் 300 கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதே போன்று, இன்று (23.10.2021) காலை, அடையாறு காவல் மாவட்டம், J-5 சாஸ்திரிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, எலியட்ஸ் கடற்கரை அருகில், காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியர்களின் மினி மாரத்தான் போட்டியைதெற்கு மண்டல இணை ஆணையாளர் திரு.K.S.நரேந்திரன் நாயர், இ.கா.ப., அவர்கள்கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து இன்று (23.10.2021) காலை R-5 விருகம்பாக்கம் காவல் நிலையஎல்லைக்குட்பட்ட அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், வடபழனி காவல் சரகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இடையே, காவல்துறை மக்களின் நண்பனாஅல்லது மக்களின் பாதுகாவலரா’’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது. சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரோபோ சங்கர் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
மேலும், இன்று (23.10.2021) காலை, காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு பல்வேறுவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. S-11 தாம்பரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டமேற்கு தாம்பரம், இரும்புலியூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, ’’தேசிய கட்டமைப்பில் காவல்துறையின் பங்கு முக்கியமானது’’ என்றதலைப்பில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. மேலும், காவல்துறையின் பெருமைகள், காவல் பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, பேச்சு போட்டியில் வென்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள்வழங்கப்பட்து.