சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில்ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடவாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து பணிகள்அதிகரித்தல், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம்அதிகளவில் கண்காணித்தல், வாகனத் தணிக்கைகள்மேற்கொள்ளுதல் மற்றும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காவல் ஆளிநர்களைஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும்குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல்ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டுகுற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல்ஆளிநர்கள் மற்றும் ரோந்து வாகன காவல் குழுவினர்கள் மற்றும்சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல்அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல்ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து அவர்களது பணியைப்பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக பின் வரும் சம்பவங்களில் சிறப்பாகபணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் நபரைசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில்அழைத்து பாராட்டினார்.
1. செம்பியம் பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கியஆதரவற்ற மூதாட்டி மீட்பு.
சென்னை பெருநகர காவல், K-1 செம்பியம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் திரு.S.ஶ்ரீதர், கடந்த 01.11.2022 அன்று P.H ரோடு, அம்மா உணவகம் அருகில்பணியிலிருந்த போது, அங்கு பிளாட்பாரத்தில் வசித்த ஆதரவற்றமூதாட்டியை மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனை பார்த்தஉதவி ஆய்வாளர் ஶ்ரீதர் உடனே சென்னை பெருநகர காவல்கரங்கள் அமைப்பிற்கு தகவல் தெரிவித்து மேற்படி மூதாட்டியைமீட்டு அருகில் உள்ள காப்பகத்தில் பத்திரமாக சேர்த்தார்.
2. செம்பியம் பகுதியில் கழிவு நீர் கல்வாய் அடைப்பைபோலீசார் சரி செய்து மழை வெள்ள நீரைவடியவைத்தனர்.
K-1 செம்பியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பயிற்சிதிரு.K.நடராஜன், முதல் நிலைக்காவலர் திரு.L.முத்துகிருஷ்ணன்ஆகியோர் கடந்த 01.11.2022 அன்று BB ரோடு, P.H ரோடுசந்திப்பில் உள்ள கழிவு நீர் கால்வாய் அடைப்பு சரி செய்து, சாலையில் தேங்கிய மழை வெள்ள நீரை வடியவைத்து சிறப்பாகபணிபுரிந்துள்ளார். காவலர்களின் இப்பணியை பொதுமக்கள்வெகுவாக பாராட்டினர்.
3. திரு.வி.க நகர் பகுதியில் கழிவு நீர் கல்வாய் அடைப்பைபோலீசார் சரி செய்து மழை வெள்ள நீரை வடியவைத்தனர்.
K-9 திரு.வி.க நகர் காவல் நிலைய முதல் நிலைக்காவலர்திரு.M.A.பாஸ்கர், (மு.நி.கா.42767) காவலர்திரு.M.அருண்பாண்டி (கா.எண்.48882) ஆகியோர் கடந்த01.11.2022 அன்று பெரம்பூர், ராகவன் தெருவில் அமைந்துள்ளகழிவு நீர் கால்வாய் அடைப்பை சரி செய்து, அங்கு சாலையில்தேங்கிய மழை வெள்ள நீரை வடியவைத்து சிறப்பாகபணிபுரிந்துள்ளனர். காவலர்களின் இப்பணியை பொதுமக்கள்வெகுவாக பாராட்டினர்.
4.கொடுங்கையூர் பகுதியில் மழையில் சுற்றி திரிந்த மனநலம்பாதிக்கப்பட்ட பெண்ணை உதவி ஆய்வாளர் மீட்டுகாப்பகத்தில் சேர்த்தார்.
P-6 கொடுங்கையூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்திரு.A.ராமமூர்த்தி கடந்த 01.11.2022 அன்று காலை 11.30 மணியளவில் கொடுங்கையூர், G.N.T ரோடு , தெருவீதியம்மன்கோயில் அருகே பணியிலிருந்த போது, அங்கு மனநலம்பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையில் பெய்த மழையில் நனைந்தபடி அங்கும் இங்கும் சுற்றி திரிந்துள்ளார். இதனை கண்டஉதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மேற்படி பெண்ணைஅருகிலிருந்தவர்கள் உதவியுடன் மீட்டு காப்பகத்தில் பத்திரமாக சேர்த்துள்ளார்.
5.எழும்பூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக வாலிபரைகொலை செய்யும் நோக்குடன் கத்தியுடன் வந்த 2 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் உட்பட 4 நபர்களை பிடிக்க உதவிய காவலருக்கு பாராட்டு.
சென்னை, புதுப்பேட்டை, அய்யாசாமிதெரு, எண்.89 என்றமுகவரியில் வசித்து வரும் வசீகரன், வ/20, த/பெ.ரஜினி என்பவர்கடந்த 11.10.2022 அன்று இரவு சுமார் 11.00 மணியளவில் தனதுவீட்டின் அருகே நண்பர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 7 நபர்கள் மேற்படிவசீகரனை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளனர். வசீகரன் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இது குறித்து வசீகரன்F-2 எழும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணைசெய்யப்பட்டது.
கிழக்கு மண்டல அதி தீவிர குற்றப்பிரிவில் பணிபுரியும்காவலர் திரு.S.இர்பான், (கா.எண்.52727) உதவியுடன் F-2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்குழுவினர் மற்றும் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில்சம்பந்தப்பட்ட F-2 எழும்பூர் காவல் நிலையசரித்திரப்பதிவேடு குற்றவாளி 1.மணிமாறன், வ/29, த/பெ.பிரபு, F-4 ஆயிரம் விளக்கு சரித்திரப்பதிவேடு குற்றவாளி 2.மேத்யூ (எ) வசந்த், வ/22, த/பெ.தம்பிதுரை, 3.பரத், வ/23, த/பெ.பாலாஜி, 4.ராஜ்குமார், வ/24, த/பெ.ரவிச்சந்திரன், ஆகிய 4 நபர்களை கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 1 இருசக்கர வாகனம் மற்றும் 4 பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
6.புளியந்தோப்பு பகுதியில் மழையால் சேதமடைந்தசாலையை கற்கள் நிரப்பி சரி செய்த ஆயுதப்படை பெண்காவலருக்கு பாராட்டு.
சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பெண்காவலராக பணிபுரியும் செல்வி.M.சித்திகா (பெ.கா.எண்.53669)என்பவர் இன்று (04.11.2022) காலை புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில் பணியிலிருந்த போது, அங்கு மழையால்சேதமடைந்த சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லசிரமமடைவதை கண்ட, மேற்படி பெண் காவலர் சித்திகாஅருகிலிருந்த கற்களை எடுத்து சாலைகளில் உள்ள பள்ளங்களைநிரப்பி சரி செய்தார். இதனால் போக்குவரத்து சீராக சென்றது.பெண் காவலரின் இப்பணியை அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள் பெரிதும் பாராட்டினர்.
மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த 8 காவல்அதிகாரிகள், ஆளிநர்களை சென்னை பெருநகர காவல்ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் இன்று(04.11.2022) நேரில் வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.