சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைதுசெய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், சுற்றுக்காவல் ரோந்து பணிகள் அதிகரித்தல், சுற்றுக் காவல் ரோந்துவாகனங்கள் மூலம் அதிகளவில் கண்காணித்தல், வாகனத்தணிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைகைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல்ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது, விரைந்துசெயல்பட்டு குற்றவாளிகளை கையும் களவுமாக கைதுசெய்யும் காவல் ஆளிநர்கள் மற்றும் ரோந்து வாகன காவல்குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளைகைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களைசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில்அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும்சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக பின்வரும் சம்பவங்களில்சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்களைசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில்அழைத்து பாராட்டினார்.
1. பெரியமேடு பகுதியில் அதிகாலை, வங்கி ஏடிஎம்மையத்தை உடைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்தரோந்து வாகன காவல் குழுவினர்.
G-2 பெரியமேடு காவல் நிலைய ரோந்து வாகனபொறுப்பு/உதவி ஆய்வாளர் திரு.S.பிரதாபன் (நவீனகட்டுப்பாட்டறை) மற்றும் காவலர்/வாகன ஓட்டுனர் P.வாசு(கா.47589), G-2 பெரியமேடு காவல் நிலையம் ஆகியோர்02.11.2022 அன்று அதிகாலை சுமார் 03.15 மணிக்கு இரவுரோந்து பணியிலிருந்தபோது, பெரியமேடு, வீராசாமிதெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் ஒருநபர் நீண்ட நேரம் நின்றிருப்பதையறிந்து உள்ளே சென்றுபார்த்தபோது, அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தினை இழுத்துஉடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, அவரது பெயர் சக்திவேல், வ/32, த/பெ.ராஜு, எழில்நகர், செங்கல்பட்டு மாவட்டம் என்பதும், சற்று மனநிலைபாதிக்கப்பட்டவர் என்பதும், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துதிருட முயற்சித்துக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. அதன்பேரில், G-2 பெரியமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மருத்துவ பரிசோதனை மற்றும் நீதிமன்றஉத்தரவின்பேரில், மனநல மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
2. திருவான்மியூர் பகுதியில் கடையின் ஷட்டரை உடைத்துதிருட முயன்ற நபர் கைது. 2 இருசக்கர வாகனங்கள்மற்றும் சிறிய கடப்பாரை பறிமுதல்.
J-6 திருவான்மியூர் காவல் நிலைய பயிற்சி உதவிஆய்வாளர் திரு.K.பிரதாப் குமார் மற்றும் முதல்நிலைக்காவலர் R.புருஷோத்தமன் (மு.நி.கா.44409) ஆகியோர்10.10.2022 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை, சுமார் 02.00 மணியளவில் (11.10.2022), திருவான்மியூர், லட்சுமிபுரம், காமராஜர் சாலையில்சென்றபோது, அங்கு 2 இருசக்கர வாகனங்களில் இருந்த 3 நபர்கள் காவல் குழுவினரை பார்த்ததும், இருசக்கர வாகனங்களை விட்டு தப்பித்து ஓடும்போது, காவல்குழுவினர் துரத்திச் சென்று ஒருவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் முகமது அஸ்ரப் அலி, வ/20, காதர் பாட்ஷா, தாங்கல், திருவொற்றியூர் என்பதும், இவர்அஜய் (எ) குள்ள அஜய் மற்றும் மற்றொரு அஜய்ஆகியோருடன் சேர்ந்து, மேற்படி சம்பவஇடத்தினருகிலுள்ள கடையின் ஷட்டர் பூட்டை உடைத்துவிட்டு உள்ளே சென்று திருட முற்பட்டபோது பிடிபட்டதும்தெரியவந்தது.
அதன்பேரில், J-6 திருவான்மியூர் காவல் நிலையத்தில்வழக்குப் பதிவு செய்து, எதிரி முகமது அஸ்ரப் அலி கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள்மற்றும் பூட்டை உடைக்க பயன்படுத்திய சிறிய கடப்பாரைபறிமுதல் செய்யப்பட்டது.
3. நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியைபிடித்த கிண்டி காவல் குழுவினர்.
J-3 கிண்டி காவல் நிலைய எல்லையில், 2014ம் ஆண்டு, அருள்நிதி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில்எதிரிகள் சுரேந்தர் (எ) கூடு சுரேந்தர் உள்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்குஅனுப்பப்பட்டனர். இதில் சுரேந்தர் (எ) கூடு சுரேந்தர்நீதிமன்ற பிணையில் வெளியே வந்து, நீதிமன்ற வழக்குவிசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதையடுத்து, அவர் மீது 20.9.2021 அன்று நீதிமன்ற பிடியாணைபிறப்பிக்கப்பட்டது.
J-3 கிண்டி காவல் நிலைய முதல்நிலைக் காவலர்கள்Aஅருள்ராஜ் (மு.நி.கா.43385), C.பிரதீப்குமார்(மு.நி.கா.31708) மற்றும் N.முத்துபாண்டி (மு.நி.கா.40429) ஆகியோர் தீவிரமாக கண்காணித்தும், தேடுதலில் ஈடுபட்டும், மேற்படி குற்றவாளி சுரேந்தர் (எ) கூடு சுரேந்தர் என்பவரை02.11.2022 அன்று கைது செய்து, நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி சம்பவங்களில் சிறப்பாகபணிபுரிந்த G-2 பெரியமேடு, J-6 திருவான்மியூர் மற்றும் J-3 கிண்டி காவல் நிலையங்களைச் சேர்ந்த 7 காவல்அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (05.11.2022) நேரில் வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கிபாராட்டினார்.