சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் அவர்களது தலைமையிலான குழு ஒவ்வொரு மாதமும் தீவிரமாக ஆராய்ந்து, சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையிலும் பணிசெய்யும் காவல் அதிகாரி அல்லது ஆளிநரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு “மாதத்தின் நட்சத்திர காவல் விருது” (Police Star of The Month) பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொருமாதமும் நட்சத்திர காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் காவல் அலுவலருக்கு ரூ.5,000 பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல்த்துறை ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் செப்டம்பர்-2022 மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட W-13 வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.S.பிரியதர்ஷினி மற்றும் அக்டோபர்-2022 மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட D-5 மெரினா காவல் நிலைய முதல்நிலைக் காவலர் K.பாலமுருகன் (மு.நி.கா.42731)ஆகியோரை இன்று (11.11.2022) நேரில் அழைத்துநட்சத்திர காவல் விருதுக்குரிய ரூ.5,000/- பண வெகுமதிமற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். கடந்த 2020ம் ஆண்டு W-13 வண்ணாரப்பேட்டைஅனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான போக்சோவழக்கில், காவல் ஆய்வாளர் திருமதி.பிரியதர்ஷினி திறம்படபுலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்தும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை மற்றும் சாட்சிகளைஆஜர் செய்தும் வந்த நிலையில், வழக்கு விசாரணைமுடிவடைந்து, 26.09.2022 அன்று கனம் நீதிமன்றம்இவ்வழக்கில் தொடர்புடைய 8 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையும், 15 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள்கடுங்காவல் சிறை தண்டனையும் என தீர்ப்பு விதித்தது. இவ்வழக்கில் காவல் ஆய்வாளர் திருமதி.பிரியதர்ஷினிதிறம்பட புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, 23 குற்றவாளிகளுக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்க அயராது பணிபுரிந்துள்ளார்.
இதே போல, D-5 மெரினா காவல் நிலையமுதல்நிலைக் காவலர் K.பாலமுருகன் (மு.நி.கா.42731)என்பவர், மயிலாப்பூர் காவல் மாவட்ட சைபர் கிரைம்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்தும் கண்காணித்தும், நடப்பாண்டில் காணாமல் மற்றும் திருடு போனவழக்குகளில் சம்பந்தப்பட்ட 102 செல்போன்களைகண்டுபிடித்து, பறிமுதல் செய்து, அவை செல்போன்உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களில் வருகிற 12.11.2022 முதல் 17.11.2022 வரையிலான தேதிகளில் பிறந்தநாள் கொண்டாடும் 19காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களை இன்று (11.11.2022) நேரில் அழைத்துவாழ்த்து செய்தியுடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை வழங்கி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.