ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று இந்தியா முழுவதும் பணியின்போதுஇறந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்காக “காவலர் வீர வணக்க நாள்“ அனுசரிக்கப்படுகிறது. அதன்பேரில், கடந்த 21.10.2021 அன்று தமிழக காவல்துறைதலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில், காவல்துறை தலைமை இயக்குநர்தலைமையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு, பணியின்போது இறந்தகாவலர்களுக்கு மலர் வளையம் வைத்து, மௌன அஞ்சலி செலுத்தி, துப்பாக்கி குண்டுகள்முழங்க மரியாதை செய்யப்பட்டது.
காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிமாணவர்களும் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்உத்தரவிட்டதன்பேரில், 21.10.2021 முதல் 31.10.2021 வரையிலான 11 நாட்கள் “காவலர்வீர வணக்க விழிப்புணர்வு வாரமாக” (Police Commemoration Awareness Week) கடைபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இன்று (28.10.2021) காலை B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய வளாகத்தில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு, காவல்துறை சார்பில்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற சரக உதவிஆணையாளர் திரு.மாரியப்பன் மற்றும் பூக்கடை சரக உதவி ஆணையாளர்திரு.பாலகிருஷ்ணபிரபு மற்றும் இறந்த காவலர்களின் குடும்பத்தினர்கள், காவல்துறைஅதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வீர மரணமடைந்த காவல் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் இரண்டுநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் காவல்துறையின் பெருமைகள் மற்றும்கொரோனா பேரிடர் காலத்தில் தொற்று பரவாமல் தடுத்து பணியின்போதுவீரமரணமடைந்த காவல்துறையினர் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், இன்று (28.10.2021) மதியம், V-1 வில்லிவாக்கம் காவல் நிலையஎல்லைக்குட்பட்ட விஜய் சங்கர் மஹாலில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு, காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் பணியின் போது உயிர்நீத்த காவலர்களின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலிசெலுத்தப்பட்டது. மேலும் சிலம்பம், நடனம் மற்றும் கவிஞர் இனியன் பாலா அவர்கள்காவல் பணியின் போது உயிர்நீத்த காவல் உறவுகளுக்கு கவிதை மூலம் வீரவணக்கம்செலுத்தும் நிகழ்ச்சி, காவல் சிறார் மன்றத்தின் சார்பாக யோகா நிகழ்ச்சி, நாதஸ்வரநிகழ்ச்சி, மௌன நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் இணை ஆணையாளர்(மேற்கு) திருமதி.S.ராஜேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும்வில்லிவாக்கம் சரக உதவி ஆணையாளர் திரு.B.சகாதேவன் மற்றும் திருமங்கலம் சரகஉதவி ஆணையாளர் திரு.S.ரவிசந்திரன், எவர்வின் பள்ளி நிறுவனர் திரு.புருஷோத்தமன், வில்லிவாக்கம் காவல் சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமியர்கள், எவர்வின் பள்ளி மாணவ, மாணவிகள், காவல் பணியின் போது உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினர் ஆகியோர்கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் காவலர்களின் தியாகங்கள் மற்றும்கொரோனா காலத்தில் காவல்துறையினரின் அர்பணிப்புகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
இதே போன்று, இன்று (28.10.2021) மாலை J-6 திருவான்மியூர் காவல் நிலையஎல்லைக்குட்பட்ட புது கடற்கரை பகுதியில் காவல் துறை சார்பாக காவலர் வீர வணக்கவாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பணியின்போது மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக தப்பாட்டம், பாட்டு, நாடகம் போன்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும்காவலர்களின் தியாகங்கள் மற்றும் கொரோனா காலத்தில் காவல்துறையினரின்அர்பணிப்புகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் துணைஆணையாளர் (நிர்வாகம்) திரு.P.மகேந்திரன் (பொறுப்பு: அடையார் மாவட்டம்), தரமணிசரக உதவி ஆணையாளர் திரு.M.ஜீவானந்தம், காவல் அதிகாரிகள் மற்றும் உயிர்நீத்தகாவலர்களின் குடும்பத்தினர், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இன்று (28.10.2021) மாலை , கொரோனா பணியின் போது உயிர் நீத்தபல்லாவரம் சரக முன்னாள் உதவி ஆணையாளர் திரு.ஈஸ்வரன் அவர்களின் கொளத்தூர்இல்லத்தில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு இறந்த திரு.ஈஸ்வரன் அவர்களின்திருவுருவ படத்திற்கு பல்லாவரம் சரக உதவி ஆணையாளர் திரு.ஆரோக்கிய ரவீந்திரன்மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மலர் அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல்கூறினர்.