சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைகண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறுகுற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்குபங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோதயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல்குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக M-4 செங்குன்றம் காவல்நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்று(30.10.2021) காலை 6.30 மணியளவில் செங்குன்றம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோணிமேடு சந்திப்பில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு இருசக்கரவாகனங்களுடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 6 நபர்களை பிடித்துவிசாரணை செய்த போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின்பேரில் இருசக்கர வாகனங்களை சோதன செய்த போது, அதில் நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கி மற்றும் கத்திகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில் 6நபர்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
M-4 செங்குன்றம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் 1. சேது (எ) சேதுபதி, வ/32, த/பெ.செல்லன், எண்.1/1275, எம்.ஜி.ஆர் 3 வது தெரு, காந்தி நகர், செங்குன்றம் 2.விஜய் (எ) தளபதி விஜய் வ/26, த/பெ.அழகர்சாமி, எண்.1/127, பாலகணேசன் நகர், செங்குன்றம்3.விக்னேஷ் (எ) விக்கி, வ/24, த/பெ.இளங்கோவன், எண்.2/21, தர்மலிங்கேஷ்வர் நகர், காஞ்சிபுரம் மாவட்டம் 4.பாலகிருஷ்ணன், வ/24, த/பெ.அர்ஜுனன், எண்.1/772, அம்பேத்கர்தெரு, காந்தி நகர், செங்குன்றம் 5.தமிழரசன் (எ) வெள்ளை, த/பெ.ராஜா , எண்.1/762, எம்.ஜி.ஆர் தெரு, காந்தி நகர், 6.சரவணன், வ/24, த/பெ.குரு, எண்.102/4, GNT ரோடு, சோழவாரம் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 துப்பாக்கி, 3 தோட்டாக்கள், 3 நாட்டுவெடிகுண்டுகள், 3 கத்திகள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள்பறிமுதல்.
மேலும் விசாரணையில் மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் சேது (எ) சேதுபதி, விஜய் (எ) தளபதி விஜய் மற்றும் தமிழரசன் (எ) வெள்ளை ஆகிய மூவரும் சேர்ந்துகடந்த 15.10.2021 அன்று செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை கடத்தி ரூ. 20 ஆயிரத்தை பறித்துகொண்டு தப்பியுள்ளனர். பின்னர் அந்த பணத்தை வைத்து நாட்டுவெடிகுண்டு தயாரித்துள்ளனர். பின்னர் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு, வியாசர்பாடிபகுதியில் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி பழனியின் நினைவு நாளுக்கு வரும் முத்துசரவணன் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டு மேற்படி இடத்தில் பதுக்கி இருந்ததுதெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 6 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.