ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று இந்தியா முழுவதும் பணியின்போதுஇறந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அஞ்சலி செலுத்தும் “காவலர் வீரவணக்க நாள்“ குறித்து, பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும்அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவிட்டதன்பேரில், 21.10.2021 முதல் 31.10.2021 வரையிலான 11 நாட்கள் “காவலர் வீர வணக்கவிழிப்புணர்வு வாரமாக” (Police Commemoration Awareness Week)கடைபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று (31.10.2021) மாலை, பாக்யலஷ்மி மஹாலில், கோயம்பேடு காவல் சரகம் சார்பில், காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தைமுன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பணியின்போது வீரமரணமடைந்தகாவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு, கோயம்பேடு சரகஉதவி ஆணையாளர் திரு.ரமேஷ் பாபு தலைமையில், K-10 கோயம்பேடு, K-11 CMBT மற்றும் T-4 மதுரவாயல் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள்மற்றும் கோயம்பேடு St.தாமஸ் கல்லூரி மாணவ, மாணவிகள் மலர் தூவி அஞ்சலிசெலுத்தினர். மேலும், காவல்துறையின் பெருமையை போற்றும் வகையில், காவல்துறையினரின் கடுமையான பணிகள் மற்றும் தியாகங்கள் குறித்து கல்லூரிமாணவ, மாணவிகளின் நாடகம், நடன நிகழ்ச்சி மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவல்துறையின் பெருமை குறித்துசிறப்பாக நடித்து காட்டிய மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவ, மாணவிகள்ளுக்கு உதவி ஆணையாளர் திரு.ரமேஷ்பாபு நினைவு பரிசுகள் வழங்கி, பாராட்டினர்.