கடந்த 19.09.2022 முதல் 24.09.2022 வரை புதுடில்லியில்நடைபெற்ற காவல் துறையினருக்கான 7வது அகில இந்தியகாவல் ஜுடோ கிளஸ்டர் சாம்பியன் ஷிப் (All India Police Judo Cluster Championship-2022) விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு காவல் துறை சார்பாக சென்னை பெருநகர காவல்V-5 திருமங்கலம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் திருமதி.M.சாமியா சுல்தானா கலந்து கொண்டுவெள்ளிப்பதக்கமும், ஆயுதப்படை பெண் காவலர் S.அனுஷா, (பெ.கா.எண்.54398) வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.
மேலும் கடந்த 25.09.2022 முதல் 01.10.2022 வரை குஜராத்மாநிலத்தில் நடை பெற்ற 36வது தேசிய கபடி போட்டியில்(36th National Kabadi Games-2022) தமிழ்நாடு காவல் துறைசார்பாக சென்னை பெருநகர காவல் J-13 தரமணி காவல்நிலைய முதல் நிலை பெண் காவலர் P.நதியா, (மு.நி.கா.33015) ஆயுதப்படை பெண் காவலர்கள் K.ஸ்வேதா,(பெ.கா.எண்.54300), B.சித்ரா, (பெ.கா.எண்.54303) ஆகியோர்வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.
தொடர்ந்து, கடந்த 06.10.2022 முதல் 09.10.2022 வரைதிருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஜுடோ அசோசியேஷன்நடத்தும், சீனியர் ரேங்கிங் ஜுடோ போட்டி மற்றும் மாநிலநடுவர் பயிற்சி மாநாட்டில் (Senior Ranking Judo Tournament & Senior Coaching Refree Seminaar),சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையைச் சேர்ந்த பெண்காவலர்கள் கோப்பெருந்தேவி (பெ.கா.54891), ஜோதிமணி (பெ.கா.57051), விஜயலஷ்மி (பெ.கா.56948) மற்றும் காவலர்மகேஷ்குமார் (கா.50136) ஆகியோர் 2 வெள்ளி பதக்கங்கள்மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் பெற்றனர். மேலும், தலைமைக் காவலர் ராஜு (த.கா.36228), முதல்நிலை காவலர்ராஜலிங்கம், (மு.நி.கா.33084) மற்றும் காவலர் நந்தகுமார் (கா.48503) ஆகியோர் நடுவருக்கான பயிற்சி மாநாட்டில்சிறப்பாக பங்கேற்று முதல் மதிப்பிற்கான சான்றிதழ்கள்பெற்றனர்.
மேலும், 01.09.2022 முதல் 05.09.2022 வரை, கேரளமாநிலம், திருச்சூரில் நடைபெற்ற தேசிய கேலோ பெண்கள்ஜுடோ (Khelo India Women’s Judo National League)போட்டியில், ஆயுதப்படை பெண் காவலர் அர்ச்சனா (பெ.கா.54895) என்பவர் கலந்து கொண்டு சான்றிதழ்பெற்றார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப. அவர்கள் மேற்படி விளையாட்டுபோட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்ற சென்னை பெருநகர காவல் ஆண் மற்றும் பெண் காவல்ஆளிநர்களை இன்று (18.10.2022) காவல் ஆணையரகத்திற்குநேரில் அழைத்து பாராட்டி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியின்போது, கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர்.J.லோகநாதன்,இ.கா.ப., அவர்கள் உடனிருந்தார்..