தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு அப்பாவு, மாநில அமைச்சர்கள் மனோ தங்கராஜ்,செஞ்சிமஸ்தான் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் தலைமையிடமாக கொண்ட சாந்திகிரி ஆஸ்ரமம் உலகம் முழுவதும்ஆன்மீக சேவைகளை செய்து வருகிறது. தமிழகத்தின் சென்னைக்கு அருகில் உள்ள செய்யூரில் சாந்திகிரிஆஸ்ரமம் அமைந்துள்ளது. ஆஸ்ரமத்தின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா அமர்வை தமிழக சபாநாயகர் மு. அப்பாவு 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
சாந்திகிரி ஆசிரமம் குருஸ்தானிய சிஷ்ய பூஜித அமிர்த ஞான தபஸ்வினி நாளை (05/01/2024வெள்ளிக்கிழமை) சென்னையை வந்தடைவார்.
சாந்திகிரி ஆசிரமத்தின் ஆன்மீக காரியங்களின் சொல் மற்றும் வழி என்பதுவே சிஷ்ய பூஜிதா என்ற உன்னதநாமம். அரிதான சந்தர்ப்பங்களில் மிக முக்கியமான இடங்களுக்கு மட்டுமே சிஷ்ய பூஜிதா மையஆசிரமத்திலிருந்து வெளியிடங்களுக்கு பயணிப்பது வழக்கம். இருப்பினும் சென்னையை நோக்கிய முதல் பயணம் இதுவே. திருவனந்தபுரம் போத்தன்கோடு சாந்திகிரி ஆசிரமத்திற்கு தினமும் வருகை புரியும்ஆயிரக்கணக்கான குருபக்தர்களுக்கு ஆன்மீக புகலிடமாக சிஷ்ய பூஜிதா திகழ்கிறார்.
சிஷ்ய பூஜிதா 1961 ஆம் ஆண்டு கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லார் பட்டம் காலனியில்காலஞ்சென்ற செல்லப்பன்பிள்ளை மற்றும் ரத்னம்மா ஆகியோரின் நான்கு பிள்ளைகளில் முதல் மகளாகப்பிறந்தார். பூர்வ ஆசிரமத்தில் இருந்த பொழுது ராதா என்ற பெயரில் அழைக்கப்பட்டார். ஒன்பது வயதில்சாந்திகிரி ஆசிரமத்தில் இணைந்தார். 1984ல் நவஜோதிஸ்ரீகருணாகர குருவிடம் சன்னியாச தீக்ஷை பெற்றுகுருதர்ம பிரகாச சபையின் உறுப்பினரானார்.
மே 6, 1999 இல், ஆசிரம நிறுவனர் நவஜோதி ஸ்ரீகருணாகர குருவின் மறைவுக்குப் பிறகு ஆன்மிகத் தலைமைப்பொறுப்பிற்கு உயர்த்தப்பட்ட சிஷ்ய பூஜிதா, பிப்ரவரி 22, 2001 அன்று குருஸ்தானியரானார். அதன்பின், குருவின் வழிகாட்டுதலில் 23 ஆண்டுகளாக ஆசிரமத்தை நடத்தி வரும் சிஷ்ய பூஜிதா சுமார் 100 சீடர்களுக்குதீட்சை வழங்கினார். சாந்திகிரி ஆசிரமத்தின் கீழ் செயல்படும் நாடெங்கிலுமுள்ள 20 ஆசிரமங்களில்கும்பாபிஷேகம் நடத்தினார். சாந்திகிரியில் உள்ள உலகப் புகழ் பெற்ற தாமரை மலரின் பர்ணசாலை சிஷ்யபூஜிதாவின் தரிசன அனுபவத்தின் மூலம் அமைந்ததாகும்.
2009 இல் சிஷ்ய பூஜிதாவின் வட இந்திய யாத்திரை மற்றும் கடந்த டிசம்பரில் டெல்லி யாத்திரை தேசியகவனத்தைப் பெற்றன. துணை ஜனாதிபதி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் சிஷ்ய பூஜிதாவை சந்தித்துஆசிபெற்றனர்.
சிஷ்ய பூஜிதாவின் வருகையுடன், சென்னையில் தொண்டு மற்றும் சேவைத் துறையில் கால் நூற்றாண்டைநிறைவு செய்யும் ஆசிரமத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் தொடங்கப்படுகிறது.
நாளை (வெள்ளிக்கிழமை, ஜனவரி 5, 2024), போத்தன்கோடு ஆசிரமத்திலிருந்து காலை 10 மணிக்குப்புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடையும் சிஷ்ய போஜிதாவை குருபக்தர்கள் வரவேற்கவிருக்கிறா கள். சென்னையில் உள்ள பக்தர்களின் இல்ல சந்திப்பிற்குபின், ஜனவரி 6-ஆம்தேதி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள கிளை ஆசிரமத்துக்கு வருகை தருகிறார். மதியம் 12. மணிக்குஆசிரமத்திற்கு வரும் சிஷ்ய பூஜிதாவை சீடர்கள், பிரதிநிதிகள், உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும்பூரண கும்பம் வழங்கி வரவேற்பார்கள்.
இந்த நேரத்தில், ஆசிரமத்தின் சூழல் பல்வேறு இசை முழக்கத்துடன் பக்திமயமாகிறது. ஜனவரி 6 மற்றும் 7ம்தேதிகளில் ஆசிரமத்தில் தங்கி பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் வழங்கவிருக்கிறார்.
6-ம் தேதி மாலை 4 மணிக்கு நிகழ்ச்சியை தமிழக சபாநாயகர் மு. அப்பாவு தொடங்கி வைக்கிறார். கொண்டாட்ட நிகழ்வுகளை மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ் மஸ் தான் தொடங்கிவைக்கிறார். மதிப்பிற்குரிய திருநாவுக்கரசு எம்.பி. அவர்கள் தலைமை வகிக்கும் இந்நிகழ்வில் ஆசிரமத்தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி, இந்தியயூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபுபக்கர், தந்தை தாமஸ் ஐசக், செய்யூர் கிராமபஞ்சாயத்து தலைவர் திவாகர் ராமன், ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.இ.சத்யா, செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஜெயலட்சுமி மகேந்திரன், டாக்டர் ஜி.ஆர். கிரண், சகோதரிஏ.மெர்சி, கே.நம்பிராஜன், டி.பாபு, எஸ்.இளங்கோவன், சபீர் திருமலை ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஜனவரி 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு குருஸ்தான சிஸ்ய பூஜிதா குருவின் தியான மடம்மற்றும் தரிசன மந்திரத்தில் தீப ஒளி விளக்கேற்றி வெள்ளி விழா வளாகத்துக்கு அடிக்கல் நாட்டுவார். காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தை பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கிவைக்கிறார். கேரள மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் ஜி.ஆர். அனில் சிறப்பு விருந்தினராககலந்து கொள்கிறார். செய்யூர் எம்.பி ஜி.செல்வம் தலைமை வகிக்கின்ற நிகழ்வில் மிசோரம் முன்னாள் ஆளுநர்கும்மனம் ராஜசேகரன், பனையூர் பாபு எம்.எல்.ஏ,இ முன்னாள் எம்.பி. விஜிலா சத்யநாத், பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சென்னை பேராயர் டாக்டர் .சாமுவேல் மார் தியோபலிஸ் எபிஸ்கோப்பா, பிரம்மகுமாரி சகோதரி ஜான்சி, அகிலஇந்திய காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதன் பெருமாள்,பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர்பி.கே.கிருஷ்ணதாஸ், கோகுலம் குழுமத் தலைவர் கோகுலம் கோபாலன், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தாஇயக்குநர் டாக்டர். ஆர். மீனாகுமாரி, செய்யூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஆர்.செந்தில்குமார், சாந்திகிரிசித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். டி.கே.சௌந்தரராஜன்,கவுன்சிலர் சுப்பலட்சுமி பாபு, குன்ஹிகாட்ராமச்சந்திரன், டாக்டர் பிரவீன்குமார், Adv. பி. ராஜேஷ் மற்றும் மாநிலம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்துஏராளமான முக்கியஸ்தர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
வெள்ளி விழாவையொட்டி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவனந்தபுரம் சாந்திகிரி சித்தமருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தா இணைந்து ‘மக்கள் நலம்’ என்றபெயரில் இலவச சித்த மருத்துவப் பரிசோதனை மற்றும் சித்த மருந்துகள் விநியோகம் செய்யும் நிகழ்வுநடைபெறுகிறது. இத்திட்ட முகாமை பிரபல நடிகர் தலைவாசல் விஜய் தொடங்கி வைக்கிறார். மாலையில் தீபஒளி விளக்கு ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.