இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் கிக். இவருடன் தன்யா ஹோப், ராகினிதிவேதி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலுக்கான விளம்பர வீடியோ வெளியாகியுள்ளது. அதில் “சாட்டர்டே இஸ் கம்மிங்கு…” என்று ஆரம்பிக்கும் பாடலை முதல் முறையாக நடிகர் சந்தானம் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். இப்பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார். இப்பாடலின் முழு வரிகளுக்கான வீடியோ அக்டோபர் 10ஆம் தேதி மாலை 06.03 மணிக்கு வெளியாகவுள்ளது.எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போக்குற படம், சந்தானத்தின்“கிக்“.****************
நமக்கு இருக்கிற கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போகணும்.. அப்படி நினைத்து வந்தது தான் இந்த ‘கிக்‘ படம். பல வெற்றி படங்களை கன்னடத்தில் கொடுத்து விட்டு இப் படம் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார் பிரசாந்த் ராஜ். டாம்–ஜெர்ரி மாதிரி தான் ஹீரோவும் ஹீரோயினும். விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிற சந்தானம் எப்படியாவது கொஞ்சம் குறுக்கு வழியில் கூட போய் வெற்றியை அடைய துடிக்கிறவர்.
‘தாராள பிரபு’ கதாநாயகி தான்யா ஹோப், நேர்மையாய் விளம்பரத் துறையில் முன்னேற துடிக்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இரண்டு பேரும் எலியும் பூனையுமாக மோதி கொள்வது தான் கதை. சந்தானத்தை விரும்பி பார்ப்பவர்களுக்கான படம் இது.எமோஷன், சென்டிமென்ட், டிராமா எல்லாம் கலந்து இருக்கிற ஜனரஞ்சகமான இப்படத்தில்,
தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரா, மொட்டை ராஜேந்திரன், ஷகிலா, ராகிணி திவேதி, வையாபுரி, சிசர் மனோகர், கிங்காங், முத்துக்காளை, சேஷு, கூல் சுரேஷ், அந்தோணி என பல ஆர்டிஸ்ட் இருக்காங்க.. கன்னடத்தில் ரொம்ப மரியாதையுடன் கவனிக்கப்படுகிற அர்ஜுன் ஜன்யா தான் இசையமைச்சிருக்கார். ஐந்துபாடல்கள் அவரின் இசை முற்றிலும் புதுசு. தமிழ் படம் என்றதும் சந்தோஷமாக கேட்டுட்டு பண்றார். இங்கே ஒருநல்ல இடத்தையும் பிடிக்கணும், முத்திரையையும் பதிக்கணும்னு என்பது அவர் எண்ணம்.
கேமரா : சுதாகர் ராஜ் . தயாரிப்பு: நவீன் ராஜ் தயாரிப்பு மேற்பார்வை: பாக்யா பி ஆர் ஓ: ஜான்சன் .