20 திரைப்பட விழாக்களில் 70 விருதுகளை வென்ற ‘சரஸ்’ குறும்படம்

இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று, தனது முதல் தமிழ் குறும்படமானசஷ்தி’  மூலமாக 2022ல் 35 சர்வதேச திரைப்பட விழாக்களில் 75 க்கும் மேற்பட்ட விருதுகளையும், தனது இரண்டாவது தமிழ் குறும்படமானசரஸ்’ மூலமாக 2023ல் 20 சர்வேதேச திரைப்பட விழாக்களில் 70 க்கும்மேற்பட்ட விருதுகளையும் பெற்று அனைவருக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருப்பவர் ஜூட் பீட்டர்டேமியான் என்ற சார்ட்டட் அக்கவுண்டன்ட்.  இந்திய சினிமாவிற்கும் இந்த சமூகத்திற்கும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று எடுத்த முயற்சியின் தொடக்கம்தான் அவரது முதல் இரண்டு குறும்படங்களானசஷ்தியும்  சரஸ்’ வும் ஆகும். நீலிமா ராணி, என்.ஸ்ரீகிருஷ்ணா, வினைதா சிவகுமார் மற்றும் மாஸ்டர் சஞ்சீவ் ஆகியோர்சரஸ்குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.******

ரெட் கேமராவை பயன்படுத்தி ஒளிப்பதிவாளர் பிராங்க்ளின் ரிச்சர்டால்சஷ்திஒளிப்பதிவு செய்யப்பட்டது. ஒளிப்பதிவாளர் ஜி.டி.ராஜா என்பவரால் ஆரி அலெக்ஸா கேமராவால்சரஸ்ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இந்தஇரண்டு படங்களுக்கும் திரு. எம்.எஸ்,ஜோன்ஸ் ரூபர்ட் பின்னணி இசையமைக்க திரு.எஸ்.டி.பி சாமி லைவ்ரெக்கார்டிங், சவுண்ட் மிக்சிங் ஆகியவற்றை கவனித்தார். திரு.சிவகுமார் மோகனன் நிர்வாகதயாரிப்பாளராகவும் திரு குண்டல் ஆர்.பாபு படத்தொகுப்பாளராகவும் இருந்தனர். ’சஷ்திஆப்பிள் டிவி (ஐடியூன்ஸ் -iTunes) மற்றும் யூட்யூப்பிலும் (YouTube) பார்க்க கிடைக்கிறது. சரஸ்விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.  சஷ்தி’ (SHASHTHI 2022) மற்றும்சரஸ்’ (SARAS 2023) ஆகியவை பெற்ற விருதுகள் பற்றிய விவரங்கள்.எம்.டி.பி. (IMDB) இணையதள பக்கங்களில் கிடைக்கின்றன.