சிலைக் கடத்தல் பின்னணியில் அமைந்துள்ள ‘பரம்பொருள்‘ படத்தின் காணொளி காட்சியை. மணிரத்னம், சுஹாசினி வெளியிட்டனர். *இப்படம் செப்டம்பர் 01 முதல் திரையரங்கில் வெளியாகிறது* கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான ‘பரம்பொருள்‘ திரைப்படத்தை சி. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ், கிரிஷ் தயாரிப்பி ல்உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரோடு இளம் நடிகர் அமிதாஷ் இணைந்துள்ளார். சக்திபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார்.********
சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. கதாநாயகியாக காஷ்மீராபர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர்.
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, ‘ரிச்சி‘ படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ‘டான்‘, ‘சாணிக் காயிதம்‘, ‘ராக்கி‘, ‘எட்டுதோட்டாக்கள்‘ படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக தினேஷ் சுப்பராயன், நடனஇயக்குநராக சதீஷ் கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி இப்படத்தில்பணியாற்றியுள்ளனர்.