திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவால் மாணவர்கள்பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – சரத்குமார்

திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு வாயுக்கசிவு ஏற்பட்டு மாணவிகள்மயக்கமடைந்த நிலையில், இன்று மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டு குழந்தைகள் மயக்கமடைந்திருக்கும் செய்தி அதிர்ச்சிஅளிக்கிறது. முதலில் வாயுக் கசிவு ஏற்பட்ட போதே மாணவிகள் வேதிப் பொருள் வாசனையைப் பற்றி ஆசிரியர்களிடம் கூறியும் சரியாககவனம் கொடுக்கப்படவில்லை என்பதை அறிய முடிகிறது. சம்பவம் நடந்து 10 நாள்களுக்கு பின்பும் வாயுக் கசிவிற்கானகாரணம் கண்டறியப்படவில்லை எனவும் காவல் துறை தரப்பு தெரிவித்துள்ளது. காரணம் கண்டறியப்பட்டு வாயுக்கசிவைதடுத்தபிறகே நிர்வாகத்தினர்  பள்ளியைத் திறந்திருக்க வேண்டும். ஆனால் எந்த விளக்கமும் உத்தரவாதமின்றி, இன்று  பள்ளி திறக்கப்பட்ட  நிலையில் மீண்டும் வாயுக் கசிவால் பாதிப்புநிகழ்ந்ததற்கு பள்ளி நிர்வாகம் முழுப் பொறுப்பேற்று உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறைஅமைச்சரும், உயர் அதிகாரிகளும்  இந்த சம்பவம் குறித்து நேரடி விசாரணை மற்றும் ஆய்வு நடத்தி,அங்கு வாயுக் கசிவுஇல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் இதுபோன்ற முக்கியமான பிரச்சனைகளை நேரடியாகக் கையாண்டு  மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவலியுறுத்துகிறேன். தனியார் பள்ளியோ அரசுப் பள்ளியோ எதுவாக இருந்தாலும், குழந்தைகள் பாதுகாப்பு  என்பது அரசின் கடமைகளுள்ஒன்றாக இருப்பதை கவனத்தில் கொண்டு, இந்தப் பள்ளி விவகாரத்தில் அரசும், காவல்துறையும், பள்ளி நிர்வாகமும் உரியநடவடிக்கை மேற்கொண்டு  ஆவன செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.