அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு நேற்று (31.08.2021 – செவ்வாய்க்கிழமை)கட்சியின் தலைமை அலுவலகத்தில் இயக்கத்தின் நிறுவனத்தலைவர் புரட்சிதிலகம் திரு.ரா.சரத்குமார் அவர்கள் தலைமையில்இயக்கத்தின் கொடியேற்றி, நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி, நிர்வாகிகளுடன் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு, இயக்கத்தின்காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளராக S.குருமூர்த்தி செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளராக கார்த்திக்கும் நியமனக்கடிதம் வழங்கப்பட்டது. பொருளாளர் .A.N.சுந்தரேசன் முன்னிலையில், சென்னை மண்டல அமைப்புச் செயலாளர் D.மகாலிங்கம் ஏற்பாட்டில், விழுப்புரம் மண்டல அமைப்புச் செயலாளர் செந்தில்முருகன், அரசியல் ஆலோசகர் A.D.சந்திரபோஸ் ஆகிய மாநில நிர்வாகிகளும், வட சென்னைமேற்கு R.எட்ராஜா, தென் சென்னை மத்தியம் கிண்டிதிரு.இரா.வேணு, மத்திய சென்னை மத்தியம் புரசைதிரு.D.நாகப்பன், திருவள்ளூர் வடக்கு மணலிதிரு.M.பாலகிருஷ்ணன், மத்திய சென்னை மேற்குதிரு.M.A.ஆண்டனி, வட சென்னை கிழக்கு ராயபுரம்திரு.K.விஜயன், செங்கல்பட்டு தெற்கு திரு.A.பொன்வேல், செங்கல்பட்டு கிழக்கு தையூர் ரமேஷ், விழுப்புரம் கிழக்குதிரு.கோ.தசரதன், விழுப்புரம் வடக்கு திரு.G.ஆறுமுகம் கடலூர்தெற்கு திரு.சூர்யபிரசாத், திருவள்ளூர் மேற்கு திரு.சந்தனக்குமார், திருவள்ளூர் கிழக்கு திரு.G.K.பெருமாள் ஆகிய மாவட்டச்செயலாளர்களும், பிற நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.