கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட குலசேகரம் பேரூராட்சி வணிகநிறுவனங்கள், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், 3 மருத்துவகல்லூரிகளும், அமைக்கப்பெற்ற சிறந்த பகுதியாக இயங்கிவருகிறது. குலசேகரத்திற்கு சுமார் 10 கி.மீதொலைவிற்குள்ளாக திற்பரப்பு அருவியும், பேச்சிப்பாறைஅணையும், பெருஞ்சாணி அணையும், மாத்தூர் தொட்டிப்பாலமும், ஆதிகேசவப் பெருமாள் கோயிலும், மிகவும்புகழ்பெற்ற சிவ ஆலயங்களும் அமைக்கப்பெற்று, தினசரிவெளியூரை சேர்ந்த எண்ணற்ற மக்கள் வந்து இயற்கையைகண்டு களித்து செல்லும் சிறந்த சுற்றுலா மையமாகவும்அமைந்துள்ளது. குலசேகரம் பகுதியை மையமாகக்கொண்டு தினச்சந்தைஇயங்குவால், கேரளா மாநிலத்தை சேர்ந்த வணிகர்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வருகை புரிகிறார்கள்.நகரின் முக்கிய வருவாய் ஆதாரமாகவும், தமிழ்நாட்டில்ரப்பர் விலை நிர்ணயம் செய்யப்படும் பகுதியாகவும்செயல்படும், இப்பகுதியைச் சார்ந்தே ரப்பர் கொள்முதல்மையங்களும் இயங்கி வருகின்றன. இத்தனை சிறப்புஅம்சங்கள் கொண்ட குலசேகரம் பஞ்சாயத்து பகுதி, வளர்ச்சி குறைந்த பகுதியாக காணப்படுவதுஏற்புடையதல்ல. குலசேகரத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைமேம்படுத்துவதற்கும், நிர்வாக வசதிக்காகவும் குலசேகரம்பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவது அவசியம்என்ற அடிப்படையில், குலசேகரம் பேரூராட்சி அருகிலுள்ளதிற்பரப்பு பேரூராட்சி, பொன்மனை பேரூராட்சியின் ஒருபகுதி, அயக்கோடு ஊராட்சி ஆகியவற்றை இணைத்துகுலசேகரம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் எனஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழகஅரசை வலியுறுத்துகிறேன்.