சபரிமலையில் யோகிபாபு நடிக்கும் ‘சன்னிதானம் PO’ பட பூஜை

சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம்சன்னிதானம் PO’ யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் நடிக்கும் இந்தப்படத்தை  ராஜீவ் வைத்யா இயக்குகிறார்இந்த படத்தின் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் முதல் கிளாப்பை அடித்து துவங்கி வைத்தார். திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவரான அட்வகேட் அனந்தகோபன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.*************

சபரிமலை பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகிறதுஇந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு திரைப்படத்தின் பூஜை மகர ஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறுவது இதுதான் முதன்முறை.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்: திரைக்கதைராஜேஷ் மோகன் ஒளிப்பதிவுவினோத் பாரதி .A  ஒலி வடிவமைப்புரெங்கநாத் ரவீ தயாரிப்பு மேற்பார்வைரிச்சர்ட் இணை தயாரிப்பாளர்சுஜில் குமார் ஸ்டில்ஸ்நிதாத் KN வடிவமைப்புஆதின் ஒல்லூர்,  மக்கள் தொடர்பு – KSK செல்வா