“டெஸ்ட்” திரைப்பட விமர்சனம்

சக்ரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் சசிகாந்த் ஆகியோரின் தயாரிப்பில் எஸ்.சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் “டெஸ்ட்”. மாதவன் தண்ணிரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் பொறியாளர். அதை அரசுடமையாக்க முயற்சிக்கிறார். அவரது மனைவி நயன்தாரா பல வருடங்களாக குழந்தையில்லாமையிருந்து பிறகு ஒரு குழந்தைக்கு தாயாகி அக்குழந்தையை  வளர்ப்பதிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். சித்தார்த், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடக்கவிருக்கும் மட்டைப் பந்தாட்டப் போட்டியில் கலந்து வெற்றி பெற்ற பிறகு ஓய்வு பெற நினைக்கிறார். இந்த மூன்றுபோர்களின் வருங்கால திட்டத்தையும்  ஒரே புள்ளியில் ஒன்று சேர்ப்பதுதான் இப்படத்தின் கதை. மாதவன், நயன்தாரா, சித்தார்த் இம்மூவரும் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். ஒருவர் நடிப்பை இன்னொருவர் மிஞ்சுகிறார். இப்படி மூவரும் ஒருவருக்கொருவர் நடிப்பதில் யார் முதலிடம் பிடிப்பார்கள் என்று பார்வையாளர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியாத அளவுக்கு மூவரும் அருமையாக தங்களது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் ஒவ்வொரு நகர்வும் அடுத்தக் காட்சியை காண தூண்டவைக்கும் அளவுக்கு காட்சிகள் விறுவிறுப்பாக செல்கிறது. இக்காலத்தில் லட்சியம் நிறைவேற வில்லத்தனமும் கைகொடுக்கும் என்பதை, மாதவன் கதாபாத்திரத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சசிகாந்த்.