சிறுவர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் “வீரன்”

சத்தியஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் ஏ.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, நடித்திருக்கும் படம் ‘வீரன்’.  சிறுவர்களின் பொழுதுபோக்கு படமாகவும் அதே நேரத்தில் பகுத்தறிவை போதிக்கின்ற படமாகவும் ஆன்மீகத்தை அறிவுறுத்தும் படமாகவும் ஆங்காங்கே தன்னம்பிக்கையை ஊட்டும் படமாகவும் தந்திருக்கும் இயக்குநரை பாராட்ட வேண்டும். ஆதிக்கு ஒரு அபூர்வ சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியின் மூலம் அவர் ஊருக்கு வரப்போகும் ஆபத்தை அறிகிறார். அந்த ஆபத்திலிருந்து அந்த ஊர் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. தன்னம்பிக்கையோடு முயற்சி செய்தால் அந்த முயற்சிக்கு கடவுள் துணை செய்வார். முயற்சி இல்லை என்றால் பலன் இல்லை என்பதை சிறுவர்களுக்கு சொல்வதைப் போல் சொல்லி, சோம்பேறிகளுக்கு பாடம் நடத்துகிறார் ஆதி. கற்பனை குதிரைக்கு கடிவாளம் கிடையாது என்பதை நினைவில் வைத்துக் கொண்டுதான் படம் பார்க்க வேண்டும். ஒரு மனிதனுக்குள் எப்படி மின்னல் இருக்கும் என்றெல்லாம் யோசித்தால் அரங்கிற்குள் நாம் இருக்க முடியாது. சிறுவர்களால் மட்டும்தான் இருக்க முடியும். ஏனென்றால் இது அவர்களுக்காவே தயாரித்த படம். முற்போக்கான கருத்துக்களை குழந்தைத்தனத்தில் சொல்லும் படம் ‘வீரன்’.