ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் பதாகை வெளியீடு

சத்யஜோதி ஃபிலிம்ஸ், ‘யங் சென்சேஷன்ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் மீண்டும்வீரன்படத்தில் இணைந்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பிறந்தநாளன்று இந்தப் படத்தில் அவரது அசத்தலான தோற்றத்துடன் வெளியாகி இருக்கும் முதல் பார்வை பதாகை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறதுஃபேண்டசி மற்றும் வேக்கியான எலிமென்ட்ஸ் கலந்த அம்சத்துடன்வீரன்படத்தின் முதல் பார்வை அமைந்துசினிமா ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை சரியான அமைப்புடன் ஈர்க்கும் வகையில் வெளியாகியுள்ளது.  மரகத நாணயம்மூலம் புகழ் பெற்ற இயக்குநரான .ஆர்.கே. சரவன்வீரன்படத்தை தமிழ் மற்றும. தெலுங்கில் கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இதற்குமுன்பு நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.**********

மேலும், இவருடைய ஸ்டைலும் நடிப்பும்அவருடைய ரசிகர்களுக்கே புதிதான விஷயமாக இதில் இருக்கும். ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் .ஆர்.கே. சரவன் ஆகியோர் இதற்கு முன்பு கமர்ஷியலாக வெற்றிப் படத்தைக்கொடுத்திருப்பதால் இவர்கள் மீண்டும் இணைந்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் வர்த்தகவட்டாரத்திலும் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக, இதன் முதல் பார்வை வெளியாகி இருப்பதுஎதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது.

படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடையும்தருணத்தில் இருக்கிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் கோடை விடுமுறை 2023-க்கு படத்தை வெளியிடதிட்டமிட்டுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

நகைச்சுவை, ஆக்‌ஷன் ஆகியவற்றின் நேர்த்தியான கலவையுடன், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்பபார்வையாளர்களின் ரசனைகளுக்கு ஏற்ப ஒரு முழுமையான விவேகமான குடும்ப பொழுதுபோக்குப் படமாகவீரன்இருக்கும்.

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க, ’வீரன்படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன்தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை ஜி.சரவன் மற்றும் சாய் சித்தார்த் இணைந்துதயாரிக்கின்றனர்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரம்பேனர்: சத்யஜோதி ஃபிலிம்ஸ் நடிகர்கள்: ஹிப்ஹாப் தமிழா, அதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர்இயக்கம்:.ஆர்.கே.சரவன்இசை:ஹிப்ஹாப் தமிழாஒளிப்பதிவு: தீபக் டி மேனன்படத்தொகுப்பு: ஜி.கே பிரசன்னாகலை: என்.கே.ராகுல்சண்டைப்பயிற்சி: மகேஷ் மேத்யூவிளம்பர வடிவமைப்பாளர்: ட்யூனி ஜான்படங்கள்: அமீர்ஆடை வடிவமைப்பாளர்: கீர்த்தி வாசன்