சென்னை,ஜன.14- சத்திய ஜோதி ஜி. தியாகராஜன் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘கேப்டன் மில்லர்‘. ஒரு ஜமீனுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வாழும் பழங்குடியினமக்கள் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிவன் கோவிலை கட்டி சிவலிங்கத்திற்கு அடியில் விலைமதிப்பு மிக்கநவரத்தினக்கல்லில் அவர்களின் கிராம தேவதை சிலையை செய்து மறத்து வைத்திருக்கிறார்கள். அந்தசிலையை அடைய அவ்வூர் ஜமீன்தாரும் நாட்டையாளும் ஆங்கிலேயர்களும் முயற்சி செய்கிறார்கள். இவர்களுக்கிடையில் அதே கிராமத்தில் பிறந்து வளர்ந்த தனுஷ், நம்முன்னோர்கள் செய்த சிலை நமக்கேசொந்தம் என்று போராடுகிறார். இதுதான் கதை. ஜமீன்தார் என்ற ஆதிக்கவர்க்கத்திற்கு எதிராக ஆலயப் பிரவேசம் செய்ய வைத்ததும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு சமாதி கட்டியிருக்கும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பாராட்டுதலுக்குறியவர். மாறுபட்ட தோற்றத்தில் வந்து தனுஷ் விளையாடியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் இசை திரைக்கதையை தொய்வில்லாமல் ஓடவைத்திருக்கிறது. போர்களத்தில் இறந்து விட்டதாக சித்தரிக்கப்பட்ட ஒருவர், உச்சக்கட்டக் காட்சியில் தோன்றிய போது ‘தலைமறைவாக இருந்தது போதும் வெளியே வா‘ என்று ஒருவர் உரக்க கர்ஜிக்கிறார். இந்தக்கட்டத்தில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனைத்தான் சொல்கிறார் என்று நினைத்து ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்த்தது நம்மை சிலிர்க்க வைத்தது.