சென்னையை சேர்ந்த சவீதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸின் (SIMATS) ஒரு அங்கமான சவீதா பல் மருத்துவக் கல்லூரியின் வெற்றி பயணத்தில் இன்னுமொரு மைல்கல்லாக, உயர்கல்விக்கான ஆஸ்கார் விருதுகள் எனப் பாராட்டப்படும் கியூ எஸ் (QS) வேர்ல்ட் யுனிவர்சிட்டி தரவரிசையில், உலகின் 18-வது சிறந்த பல் மருத்துவக் கல்லூரியாக சமீபத்தில் இடம்பிடித்தது. தமிழ்நாட்டில் இருந்து இந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே பல் மருத்துவ கல்லூரியாக சவிதா பல் மருத்துவ கல்லூரி திகழ்கிறது. இதைத் தொடர்ந்து, SIMATS வேந்தர் டாக்டர் என் எம் வீரைய்யன்; டாக்டர் தீபக் நல்லசாமி (டாக்டர் வீரைய்யனின் மகன்), கல்வியியல் இயக்குனர், SIMATS; டாக்டர் சவீதா (டாக்டர் வீரைய்யனின் மகள்), சவீதா மருத்துவக் கல்லூரியின் இயக்குநர்; டாக்டர் ஷீஜா வர்கீஸ், பதிவாளர் -SIMATS; டாக்டர் சிந்து, அக்ரெடிடேஷன் டீன் – SIMATS; மற்றும் டாக்டர் அரவிந்த், முதல்வர், சவீதா பல் மருத்துவக் கல்லூரி இன்று தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலினை சந்தித்து தரவரிசைச் சான்றிதழைக் காண்பித்தனர். கல்லூரிக்கு கிடைத்துள்ள பெருமையை அறிந்து மகிழ்ச்சியடைந்த முதல்வர், ஒட்டுமொத்த குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்ததோடு மேலும் மேலும் வெற்றிபெற வாழ்த்தினார். ************
இந்த மாபெரும் சாதனை இந்தியப் பல்கலைக்கழகங்களில் இதுவே முதல்முறையாகும். ஆறு அளவீடுகளுடன் ஒரு நிலையான வழிமுறை கட்டமைப்பை பயன்படுத்தி, பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்தின் செயல்திறனை கியு எஸ் வேர்ல்ட் படம்பிடிக்கிறது. பல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் சவீதா பல் மருத்துவக் கல்லூரியின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு கிடைத்த கவுரவமாக இந்த அங்கீகாரம் பார்க்கப்படுகிறது.
சவீதா மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளை 1986-ல் உருவாக்கப்பட்டது. மருத்துவம், கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பது இதன் நோக்கங்களாகும். சவீதா பல் மருத்துவக் கல்லூரியையும் பொது மருத்துவமனையையும் 1988-ம் ஆண்டு அறக்கட்டளை நிறுவியது. அதைத் தொடர்ந்து, அதன் லட்சியத்திற்கு இணங்கவும், குறிப்பாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்களுக்கு சேவை செய்வதற்காகவும், செவிலியர் கல்லூரி, பிசியோதெரபி கல்லூரி, தொழில்முறை சிகிச்சை கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி ஆகியவற்றை அறக்கட்டளை நிறுவியது. சவீதா பல்கலைக்கழகம் என்று சிமாட்ஸ் முன்னர் அறியப்பட்டது, பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பின்படி 30 நவம்பர், 2017 முதல் சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) என பெயர் மாற்றப்பட்டது.