இந்திய பாராளுமன்றம் அதன் உறுப்பினர்கள் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக, உயர்ந்த கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தைப் பின்பற்றும் இடமாக இருந்து வருகிறது. ஆனால், எதிர்க்கும் எவரையும் மதிக்காத பாஜக, ஜனநாயகத்தின் பிரதான மையத்தை துர்நாற்றம் வீசும் தெருவாகச் சீரழித்து விட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின்எம்.பி டேனிஷ் அலிக்கு எதிராக, பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி, வகுப்புவாத அவதூறுகளை வீசி மிகவும்இழிவான சொற்களைக் கொண்டு வெறுப்புப் பேச்சு பேசிய சம்பவம் நாட்டின் ஜனநாயக மையத்தின் புனிதத்தைஒரு புதிய தாழ்வு நிலைக்கு தள்ளியுள்ளது. ஆளும் கட்சி எம்.பி.யின் இந்த வெறுப்பு வார்த்தைப் பிரயோகத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் பி.எம்.காம்ப்ளே தெரிவித்தார்.
பாஜக எம்பி ரமேஷ் பிதுரி, டேனிஷ் அலி எம்பிக்கு எதிராக அவதூறான வார்த்தைகளால் இழிவு செய்ததுதனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராக மட்டும் அல்ல, மாறாக அது நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மைசமூகமான முஸ்லிம்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதல் ஆகும். பாராளுமன்ற உறுப்பினர் டேனிஷ்அலியை பயங்கரவாதி என்று கூறியது மட்டுமின்றி, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பாஜக எம்.பி. கேவலமாக பேசியுள்ளார். தவறாக நடந்து கொண்ட எம்.பி.க்கு எச்சரிக்கை மட்டும் கொடுத்து விட்டுசபாநாயகர் அந்த விவகாரத்தை கை கழுவிவிட்டார்.
இந்த இழிவான செயல் நடந்தேறும்போது பிதுரியின் பின்னால் இருந்து மூத்த பாஜக எம்பிக்கள் சிரிப்பதுசம்பவத்தை மோசமாக்குகின்றன. ஆளும் கட்சி உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகபாராளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகளை பேசும் இடமாக இப்போது பாராளுமன்றம் மாறிவிட்டது.
நாடாளுமன்ற பதிவுகளில் இருந்து இழிவான கருத்துகளை நீக்குவது, அல்லது பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத்சிங் மன்னிப்பு கேட்பது அல்லது குற்றவாளிகளுக்கு கட்சித் தலைவர் வழங்கிய காரணம் கோரும் நோட்டீஸ்ஆகியவை சேதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையே தவிர வேறில்லை.
இந்திய முஸ்லிம்களின் கண்ணியத்தை காயப்படுத்தியது மட்டுமின்றி, ஜனநாயகக் கொள்கைகளையும், பாராளுமன்ற கண்ணியத்தையும் அவமதித்த பாஜக எம்பி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான நடத்தைக்காக பாஜக எம்பி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்; இல்லையேல்நாடாளுமன்றம் இனி வரும் நாட்களில் தனது மரியாதையை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் காம்ப்ளே தெரிவித்தார்.