பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி, சென்னை எழும்பூரில் இன்று (ஜூலை 20) நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. நீலம் பண்பாட்டு மையம் மற்றும் தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்ட இந்த பேரணியில், SDPI கட்சியின் மாநில செயலாளர் ஏ.கே.கரீம் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும், இந்த பேரணியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்கர் அலி, மத்திய சென்னை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.வி.ராஜா, எழும்பூர் தொகுதி தலைவர் ரியாஸ் மற்றும் துறைமுகம் தொகுதி தலைவர் யாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.