உறவுகளுக்கு வணக்கம்!
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பனைச்சந்தை – 2021, வருகின்ற அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களாக மிகப்பெரும் நிகழ்வாக நடைபெறவிருக்கிறது. தமிழகமெங்கிலுமிருந்து வரவிருக்கும் பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் பங்கெடுக்கும் இப்பெருநிகழ்வு, பனைசார் பொருட்களின் விற்பனை அங்காடிகள், பனையின் பலவிதமான பயன்கள் குறித்த விளக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாக அமையவிருக்கிறது. விற்பனையாளர்கள், நுகர்வோர் அனைவருக்கும் அனுமதி இலவசம்.
இதன்மூலம் பனையின் முக்கியத்துவம் குறித்தும், சிறப்புகள் குறித்தும் பனைசார் வாழ்வியலைக் கொண்டவர்களின் நிலையைக் குறித்தும் உலகுக்கு எடுத்துச்சென்று அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகைச் செய்யவிருக்கிறோம்.
இந்தப் பனைச்சந்தையில் உறவுகள் அனைவரும் குடும்பத்துடன் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தால், பனையால் நாமும் நம்மால் பனையும் வாழ வழிசெய்யும் தலைசிறந்த தொடக்கமாக அமையும் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்.
இடம் : ஐ.டி.பி.எல். மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளி,
கருமாரியம்மன் கோவில் தெரு, ஐ.டி.பி.எல். காலனி, துளசிங்கபுரம்,
நந்தம்பாக்கம், சென்னை-600089.
நாள் : அக்டோபர் 16 மற்றும் 17
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.
வரும் அக்டோபர் 16, 17ம் தேதிகளில், நாம் தமிழர் – சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பனைச்சந்தைத் திருவிழாவில், உறவுகள் அனைவரும் குடும்பத்துடன் பெருந்திரளாகப் பங்கேற்று, பனையால் நாமும் நம்மால் பனையும் வாழ வழிசெய்யும் தலைசிறந்த தொடக்கத்தை அமைப்போம்!https://t.co/FKIQMvJ6aN pic.twitter.com/pe1TM5byos
— சீமான் (@SeemanOfficial) October 14, 2021
– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி