சத்தமின்றி முத்தம் தரும் அர்த்தத்தை ஶ்ரீகாந்துதான் சொன்னார்- நடிகை பிரியங்கா திம்மேஷ் 

செலிபிரைட்  புரொடக்ஷன்ஸ்   நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.எஸ். தயாரிப்பில், ஸ்ரீகாந்த் –  பிரியங்கா திம்மேஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ் தேவ் இயக்கியுள்ள  திரைப்படம் ‘சத்தமின்றி முத்தம் தா’. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் கதாநாயகி பிரியங்கா திம்மேஷ் பேசும்போது, “இந்தப் படத்திற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது திடீரென்று நடந்த ஒரு விஷயம்முதல் நாள் எனக்கு போன் செய்து இந்தப் படத்தைப் பற்றிச் சொன்னார்கள் அடுத்த நாள் நான் சென்னை வந்து இந்த படத்தில் கலந்து கொண்டேன் ,இதற்கு முதலில் நான் ஶ்ரீகாந்த் சாருக்கு தான் நன்றி சொல்லவேண்டும், அவர்தான்  ‘சத்தமின்றி முத்தம் தா’ வுக்கு அர்த்தத்தை  சொன்னார். இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போது எனக்கு மிகவும் பிடித்தது.   இந்தப் படத்திற்குத் தேவையான உழைப்பைக்  கொடுத்துள்ளேன்”. என்றார்.

இயக்குநர் ராஜ்தேவ் பேசியதாவது…,இந்தப் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை த்ரில்லராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அதுபோலத்தான் எழுதவும் ஆரம்பித்தேன், மிகவும் சிரமமாக இருந்ததுஇந்தப்படத்திற்காக நடிகர்களைத்தேர்வு செய்யும்போது  இது போன்ற கதைகள் கொண்ட படங்களில் நடிக்காதவர்களைத் தான் செய்யவேண்டும் என்று நினைத்தேன், அப்படித்தான் ஶ்ரீகாந்த் சாரை சந்தித்து இந்த படத்தைப் பற்றிப்பேசினேன். அனைத்து நடிகர்களையும் அப்படித்தான் தேர்வு செய்தேன். படம் முழுக்க முழுக்கதிரில்லாரகவே இந்தப் படம் இருக்கும். கதாநாயகியும் சிறப்பாக நடித்தார். ஹீரோவுக்கு நிகராகஇந்தப் படத்தில் நடித்தார், இசையமைப்பாளரும் நானும் நிறைய டிஸ்கஸ் செய்தோம், படத்தில்பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக உங்கள் இருக்கை நுனியில் அமரவைக்கும்இந்த படத்திற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி

பின் பத்திரிக்கியயாளரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில்இயக்குநர் ராஜ்தேவ் கூறியதாவது….

இப்படம் டிரெய்லரில் சத்தம் அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும் இது தலைப்புக்கேற்ற படமாகத்தான் இருக்கும் உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். இந்த விழாவிற்குச்  சூழ்நிலைகாரணமாகவே ஸ்ரீகாந்த் அவர்களால் வர முடியவில்லை. அவருக்காக நான் மன்னிப்புகேட்டுக்கொள்கிறேன்படத்தில் அவரது உழைப்பும், அர்ப்பணிப்பும் மிகப்பெரியதுஅவர் படத்திற்காகநிறைய உழைத்துள்ளார். படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் மிகப்பிடித்த படமாக இருக்கும்என்றார்.  

பத்திரிக்கியயாளரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், நாயகி பிரியங்கா திம்மேஷ் கூறியதாவது…, 

முதலில் இயக்குநரிடம் இருந்து, கால் வந்தது, உடனே ஸ்ரீகாந்த் சாரிடம் இருந்தும் அழைப்பு வந்தது. அவர் தான் கதை பற்றி விவரித்துச் சொன்னார். எனக்கு கதை பிடித்திருந்தது. ஆனால் இயக்குநர்சொன்ன தலைப்பு புரியவில்லை ஸ்ரீகாந்த் சார் தான் அர்த்தம் சொன்னார். நான் தமிழ் கற்று வருகிறேன். தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் நிறையப் படங்கள் செய்ய வேண்டும் என்பது தான் என் ஆசை. இந்தப்படம் எனக்கு இதுவரை செய்த படங்களிலிருந்து வித்தியாசமானதாக இருந்ததுகண்டிப்பாகஉங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.  

திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜுபின் இசைக்கு பிரபலபாடலாசிரியர் விவேகா பாடல்களை எழுதியுள்ளார்.

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியா பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ளார் , ஹரிஷ்பேராடி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவுயுவராஜ் .M படத்தொகுப்பு : மதன்.G நடன இயக்குனர் தினேஷ் நடன அமைப்பை பொறுப்பேற்க,  ‘மிராக்கிள்மைக்கேல் சண்டை பயிற்சிமேற்கொண்டு இருக்கிறார். பின்னணி பாடல்களை ஆண்ட்ரியா, M.M.மானசி, ஜித்தின் ராஜ் மற்றும்ரவி.G பாடியுள்ளனர். மக்கள் தொடர்புமணவை புவன் தயாரிப்பு மேற்பார்வைA.JPஆனந்த்  தயாரிப்புகார்த்திகேயன்.S கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்ராஜ் தேவ். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பத்து விருதுகளுக்கு மேல் பெற்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. அதோடு ஆனந்த விகடன் மற்றும் சாவி இதழ்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார். மேலும் அவர்அமெரிக்காவில் நடைபெற்ற திரைக்கதை போட்டியில் அனைத்து நாடுகளும் கலந்து கொண்டநிலையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கதைகளான ‘KISS DEATH மற்றும் A STRANGER IS WALKING BY’ஆகியவற்றிற்கு சொந்தக்காரர் ஆவார். அவை இரண்டும்அமெரிக்காவில் அச்சிடப்பட்டு வெளியானதோடு இணையத்தின் KINDLE லும்  பதிவேற்றப்பற்றுள்ளது. மாறுபட்ட திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள இப்படம் தமிழகமெங்கும் மார்ச் 1 ஆம் தேதிதிரைக்குவரவுள்ளது.