தமிழகத்தில் முதல் முதலாக அமைக்கப்பட்ட மேம்பாலம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கும் அண்ணா மேம்பாலம் 1973 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் ஒன்றாம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி விழாவை எடுத்துள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி ராஜாமணி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர், மருத்துவர் எழிலன், சென்னை மாநகர ஆணையர் இராதாகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள், தொழிலதிபர்கள் அபிராமி இராமநாதன் , நல்லி குப்புசாமி, மற்றும் விகே டி பாலன், விஜிபி குழுமத்தின் மேலாண் இயக்குநர் இரவிதாஸ், பொறியாளர் நடராஜன் ,கலை இயக்குநர் கதிர், ஆகியோர் கலந்துகொண்டு பாலத்தின் சிறப்புகளை நினைவு கூர்ந்தனர்.
குறிப்பாக இந்த பாலத்தை வடிவமைத்து கட்டி முடித்த ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்டிரக்சன் மற்றும் தொழில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விழா மேடயில் சிறப்பிக்கப்பட்டார். கலைநிகழ்ச்சிகளோடு தொடங்கிய இந்த வண்ணமிகுவிழாவில் பொதுமக்களும் கலந்துகொண்டு மேம்பாலத்தின் மேன்மையை அறிந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி விரைவில் புதிய தலைமுறையில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.