கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் “செம்பி”. இப்படத்தில் தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா,பேராசிரியர். கு.ஞானசம்பந்தன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மலைவாழ் பழங்குடியின கோவை சரளாவும் அவரது 10 வயது பேத்தியும் கொடைக்கானல் மலையில் வாழ்ந்து வருகிறார்கள். சுற்றுலாவுக்கு சென்ற மூன்று பெரிய இடத்து பையன்கள் 10 வயது சிறுமியை கற்பழித்து விடுகிறார்கள். அதற்கு நீதி கிடைக்க போராடுகிறார் கோவை சரளா. நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார். நகைச்சுவை நடிகையாக வலம் வந்த சரளாவை, கொதிக்கும் குணச்சித்திர நடிகையாக மாறி வியப்பூட்டுகிறார். அரசியலின் குள்ளநரிதனத்தை அப்படியே வெளிப்படுத்துகிறார் நாஞ்சில் சம்பத். ஆளுங்கட்சி அரசியல்வாதியின் முகமும் சிரிப்பும் பழ.கருப்பையாவின் முகத்தில் காணமுடிகிறது. நீதியை மட்டுமே பார்க்கும் கண்ணாகவே மாறியிருக்கிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். பாரவையாளர்களின் உணர்வை தூண்டிவிட்ட இயக்குனர் பாராட்டுக்குரியவர்.