மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி தண்ணீர் சூழ்ந்துள்ள பி & சி மில் துணை மின்நிலையம் மற்றும் பெரியார் நகர் துணைமின் நிலையங்களை நேரில் சென்று ஆdய்வு

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  Vசெந்தில் பாலாஜி 09.10.2021அன்று தண்ணீர் சூழ்ந்துள்ள பெரம்பூர், பி & சிமில் 33/11 கி.வோ துணை மின்நிலையம் மற்றும் பெரியார் நகர் 33/11 கி.வோ துணைமின்நிலையங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பெரியார் நகர், ஜி.கே.எம்காலனி ஆகிய இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்டார். மேலும்கார்த்திகேயன் சாலையில் அமைந்துள்ள மின்மாற்றி இயக்கி வைக்கும் பணியினைநேரில் ஆய்வு செய்தார்.   இந்த நிகழ்வுகளின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., இயக்குநர்/பகிர்மானம் மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள்உடன் இருந்தனர்மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்செய்தியாளர்களிடம் பேசுகையில்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், வடகிழக்குபருவ மழையால் பொதுமக்களுக்கு  எந்தவித பாதிப்புகளும் வந்து விடக்கூடாது எனபல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார்கள். குறிப்பாக மின்சார துறைக்கு முன்னேற்பாடுகள் செய்வதற்கு ஆலோசித்து பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார்கள்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சி தலைவர்கள் தலைமையில்அமைக்கப்பட்ட குழுவில் மின்வாரியத்தின் உயர் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.தமிழகம் முழுவதும் வாரியப் பணியாளர்கள் எவ்வித பாதிப்புக்களையும் எதிர்கொள்ளதயார் நிலையில் உள்ளார்கள். அதற்கான பொருட்களும் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளன, குறிப்பாக சென்னையை பொருத்தவரை 223 துணைமின்நிலையங்கள், செயல்பாட்டில் இருக்கின்றன. நேற்று ஒரு துணைமின் நிலையம்மழைநீர் அதிகமாக இருந்த காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது,துவும் செயல்பாட்டிற்கு கொண்வரப்பட்டு ருக்கின்றது.  அதே போல் பீடர்கள ொத்தம் 1,757,  இந்த 1,757 பீடர்களும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு முழுவதுமாக மின்விநியோக பயன்பாட்டில் இயங்கிகொண்டிருக்கின்றன, அதே போல்மின்மாற்றிகளை பொறுத்தவரை நேற்று 206 மின்மாற்றிகள் மின்விநியோகத்திலிருந்துநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  இப்பொழுது 92 மின்மாற்றிகள் மட்டுமேமின்விநியோகத்தில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, இது பொதுமக்களின்பாதுகாப்பு நலன் கருதி,  மீதம் உள்ள அனைத்து மின்மாற்றிகளும் செயல்பாட்டில்உள்ள.  அதே போல நேற்று (08.11.2021) 12,200 மின்இணைப்புகளுக்கு பாதுகாப்புகாரணங்களுக்காக மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  மழைநீர்வடியாததின் காரணமாக இப்பொழுது 4,650 மின் இணைப்புகளுக்கு மட்டுமேமின்விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவும் மழைநீர  ேங்கியிருக்கும்பகுதியில் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  அந்த பணிகள்முடிந்தவுடன் மின்விநியோகம் சீரா வழங்கப்படும்.

கேள்வி: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காலத்தில் முன்னெச்சரிக்கைகாக என்னசெய்திருக்கிறீர்களா?

ஏற்கனவே பல கட்டங்களாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பலமுறைஆய்வு கூட்டம் நடத்தி ஒவ்வொரு துறைகளுக்கும் அந்தந்த துறையினுடையமுன்னேற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகளில் பல்வேறு உத்தரவுகளைவழங்கியுள்ளார்கள்.  வரக்கூடிய இரண்டு, மூன்று நாட்களில் கடுமையான மழையினைஎதிர்கொள்வதற்கு மின்சாரத்துறையை பொறுத்தவரை தயார் நிலையில் இருக்கிறது.காரணம் கடந்த இரண்டு நாட்களில் அந்தந்த பகுதிகளில் நம்முடைய பணியாளர்கள்தயார் நிலையில் இருந்தார்கள், எங்கெல்லாம் தேங்கியிருக்கின்ற மழைநீர்அப்புப்படுத்தப்பட்டுள்ளதோ உடனடியாக அந்த இடத்தில் மின்விநியோகம்செய்யப்பட்டு வருகிறது.  வரக்கூடிய மழையினை எதிர்கொள்ளக்கூடிய அளவிற்குமின்சார வாரியம் தயார்நிலையில் இருக்கின்றது.

கேள்வி: துணை மின்நிலையங்களின் கட்டமைப்பு மேம்படுத்தபடுமா?

சென்னை மாநகராட்சியினைப ொருத்த வரைக்கும் யூ.ஜி. கேபிள்போடக்கூடிய பணிகள் கூட டந்த காலங்களில் சட்டமன்றத்தில் அறிவிக்கபட்டது. ஆனால  ுழுமையடையவில்லை. 1200 கோடிக்கு மேல் கூடுதலாக செலவுகள்செய்யப்பட்டுள்ளது.  அந்த பணிகள் நிறைவு செய்யக்கூடிய கட்டாயத்தில் நாங்கள்உள்ளோம், அதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றது. அதே போல்எந்தெந்த துணை மின்நிலையங்கள் தாழ்வான நிலையில் இருக்கின்றதோ வைகள்எல்லாம் கணக்கிடப்பட்டு அதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றது. அதே போல் மின்மாற்றிகளும் எந்தெந்த இடங்களில் தாழ்வான நிலையில் உள்ளதோஅதையும் கணக்கிட்டு தற்போது இருக்கும் Plinth அளவினை 1 மீட்டர் உயரம்உயர்த்துவதற்கும் மற்றும் துணை மின்நிலையங்களை தரம் உயர்த்துவதற்கானபணிகளை மேற்கொள்ள ஆயத்தக்கட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது.  அடுத் ஆண்டிற்குள் இந்த பணிகள் முழுவதுமாக நிறைவு செய்யப்படும்.

கேள்வி ;  மின்னகத்தில் நேற்று ஒரு நாள் எத்தனை புகார்கள் வந்துள்ளன ? எவ்வளவு தீர்வு காணப்பட்டுள்ளத ?

நேற்று ஒரு நாள் மட்டும் 2,419 புகார்கள் மின்னகத்திற்கு வரப்பெற்றுருக்கின்றன, சென்னையில் மட்டும் 1,748 புகார்கள் வரப்பெற்று இருக்கின்றன, அதில்606 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.  மிக விரைவாக மின்வாரியயர்அதிகாரிகள் அந்த புகார்களுக்கு தீர்வு காண்பதில் வேகமாக செயல்பட்டு கொண்டுருக்கிறார்கள்.  குறிப்பாக பில்லர் பாக்ஸ்கள் எல்லாம் கீழே தரையை ஒட்டியிருப்பதால்மழைநீர் அதிகமாக தேங்கக்கூடிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை கருதிதான் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எந்தவித பாதிப்புகளும்ஏற்படவில்லை,  ாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்த முன்னெச்சரிகைநடவடிக்கையாகும்.

கேள்வி: சென்னையில் புதைவடக் கம்பிகள் பொருத்தும் பணி எந்தநிலையில் உள்ளது?

இந்த ஆண்டு முதலமைச்சர் அவர்கள் சென்னை மாநகராட்சி முழுவதுமே யூ.ஜிகேபிள் பொருத்தும் பணிகளுக்கான உத்தரவினை வழங்கிவுள்ளார்கள்.  ஒருஆண்டிற்குள் அந்த பணிகள் முழுவதும் எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்படும்.

25,560 பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. பில்லர் பாக்ஸ்உயர்த்தப்பட்டவை 7,050, சாய்ந்த மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டவை 7,000, மின்கம்பங்கள் இடைசொருகப்பட்டவை 3,200, ஓவர்லோடு மற்றும் தாழ்வழுத்தம்காரணமாக 4,839 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

மின்னகம் தொடங்கப்பட்டு இதுவரை 4,55,000 புகார்கள்  வந்துள்ள. அதில்4,44,000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ள. இன்னும் 11,000 புகார்கள் மட்டுமேநிறைவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.  ஏறக்குறைய 98% புகார்களுக்கு மின்சாரத்துறையால் தீர்வு காணப்பட்டுள்ளது.  அடுத்த ஆண்டு பருவமழை காலத்திற்கு முன்பாகசென்னையில் தாழ்ந்த தரைமட்டத்தில் உள்ள அனைத்து துணை மினிலையங்களின் தரைமட்டம் உயர்த்தப்பட்டிருக்கும். அதேபோல், தாழ்ந்ததலைமட்டத்தில் உள்ள மின்மாற்றிகளின் மட்டமும் உயர்த்தப்பட்டிருக்கும்.

கள ஆய்விற்குப்பின் அமைச்சர் தமிழ்நாடு மின் உற்பத்திமற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் உள்ள மாநில மின் மேலாண்மைமற்றும் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் சென்னை மின் விநியோக கட்டுப்பாட்டு மையம்ஆகியவற்றை ஆய்வு செய்து தற்போதைய மின் விநியோகம் குறித்து கேட்டறிந்துபொதுமக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்க உரி நடவடிக்கை மேற்கொள்ளஅலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மின் உற்பத்திமற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்   ராஜேஷ்லக்கானி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம், இயக்குநர்/பகிர்மானம் மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.