அமைச்சர் வி செந்தில்பாலாஜி தலைமையில் பருவ மழை குறித்து ஆய்வு

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமைஅலுவலகத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்       திரு. விசெந்தில்பாலாஜி அவர்கள் தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழையினைஎதிர்கொள்வதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ளநடவடிக்கைகள் குறித்தும் மற்றும்மேற்கொள்ளப்ப வேண்டிய முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு ஆய்வுக் கூட்டம்நடத்தினார்.  இக்கூட்டத்தில் அனைத்து மண்டலதலைமைப் பொறியாளர்கள், அனைத்து மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள்காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டனர், இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர்மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ்லக்கானி, இ.ஆ.ப., இயக்குநர்/பகிர்மானம்திரு.மா.சிவலிங்கராஜன், தலைமை அலுவலகதலைமைப் பொறியாளர்கள் மற்றும் உயர்அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது மாண்புமிகுஅமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் இதுவரைவடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்காகஎடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்து விரிவான ஆய்வினை காணொளிகாட்சியின் வாயிலாக மேற்கொண்டார்.

ஆய்வின் போது, இது போன்ற மழைக்காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும்தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் அனைத்துஅலுவலர்களும் தமது அலைபேசியை எந்தக்காரணம் கொண்டும் OFF செய்து வைக்கக்கூடாதுஎனவும், நுகர்வோரிடமிருந்து புகார்கள் வரும்பட்சத்தில் அதை உரிய முறையில் பரிசீலிக்கவேண்டும் என்றும், இதனை மீறுபவர் மீது உரியநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாண்புமிகுஅமைச்சர் அவர்கள் அனைவருக்கும்உத்தரவிட்டார்.

மழைக்காலங்களில், அலுவலர்கள் மற்றும்பணியாளர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், பொதுமக்களிடமிருந்து புகார்கள் எதுவும்வரப்பெற்றால் அதனை உதாசீனப்படுத்தாதுஅர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள்அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

பின்னர், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின்தலைமையில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு துறைகளுக்கும் எடுக்க வேண்டியமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுகள்வழங்கினார்கள். குறிப்பாக, மின்சார வாரியத்தைபொறுத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகஎடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலமாக இந்தவடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்கா 18,380 மின்மாற்றிகள், 2,00,000 மின் கம்பங்கள்மற்றும் 5,000 கி.மீ. மின்கடத்திகள் கையிருப்பில்உள்ளன. கடந்த 15.06.2022 முதல  14,69,872சிறப்பு பராமரிப்பு பணிகள்மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவற்றுள் 40,000 மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன, சாய்ந்த நிலையில் இருந்த 32,685 மின் கம்பங்கள்சரிசெய்யப்பட்டிருக்கின்றன,  ுதியதாக 25,996 மின் கம்பங்கள் இடைச்செருகல்செய்யப்பட்டிருக்கின்றன, 1,17,789 இடங்களில்பலவீனமான இன்சுலேட்டர்கள்மாற்றப்பட்டிருக்கின்றன, இதுதவிர்த்து சுமார் 1,800 கி.மீ. பழைய மின்கம்பிகள் புதியதாகமாற்றப்பட்டிருக்கின்றன எனவும் தெரிவித்தார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில்இதுவரை 2,788 எண்ணம் பழுதடைந்தமின்பெட்டிகள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன.  3,424 மின்பெட்டிகளில் பராமரிப்பு பணிகள்மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதுதவிர்த்து, இன்று வரை 3,066 பில்லர் பெட்டிகள்தரைமட்டத்திலிருந்து ஒரு மீட்டர் அளவிற்குமழைநீர் புகா வண்ணம்உயரப்படுத்தப்பட்டிருக்கின்றன.  இதேபோல், துணை மின் நிலையங்களில் இருக்கும் 16 உயரழுத்த மின்மாற்றிகளின் அடித்தளம் ஒரு மீட்டர்உயரத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது எனமாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள்தெரிவித்தார்.

நுகர்வோர் மின் சேவை மையமானமின்னகத்தில் இதுவரை மொத்தம் 12,36,725 புகார்கள் பெறப்பட்டு அவற்றுள் 12,27,281 புகார்களுக்கு (99%) தீர்வுகள் காணப்பட்டுள்ளன. மீதம் இருக்கக்கூடிய புகார்கள் சரிசெய்யப்பட்டுவருகின்றன.  தமிழகம் முழுவதுமாகஒட்டுமொத்தமாக 44 மின் பகிர்மான வட்டங்களிலும்760 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  ஒவ்வொரு குழுவிலும் 15 முதல் 20 பணியாளர்கள்அமர்த்தப்பட்டு 760 குழுக்கள் இந்த மழையைஎதிர்கொண்டு சீரான மின் விநியோகம்செய்வதற்காக தயார் நிலையில் இருக்கின்றன. 12 மண்டலங்களுக்கும் 24×7 மணி நேரமும் செயல்படும்விதத்தில் சிறப்பு அலுவல் அதிகாரிகளாக மொத்தம்56 செயற்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தலைமையின் கீழ் பாதுகாப்பு குழுக்கள்அமைக்கப்பட்டு வடகிழக்கு பருவமழையினால்ஏற்படும் மின் தடங்கல்கள் மற்றும் சேதாரங்கள்குறித்து உடனடியாக அறிக்கை அளிப்பதற்கும்மற்றும் தேவைப்படும் தளவாட சாமான்களைஉடனடியாக தெரிவிப்பதற்கும் ஏற்பாடுகள்செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களுடையதொலைபேசி எண்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்அலுவலகத்திற்கும்தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றன.

சென்னையைப் பொருத்தவரை, மாநகராட்சியினரால் அமைக்கப்படும் 24×7 மணிநேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு குழுவிற்குவாரியத் தரப்பிலிருந்து 2 பொறியாளர்கள்முறைப்பணியில் துறைசார்ந்த புகார்களைகவனிப்பதற்காக அனுப்பப்படுவர் எனவும்மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நேற்றைய மின்தேவை 13,746 மெகாவாட் ஆகவும், இன்றைய மின்தேவை 13,350 மெகாவாட் ஆக உள்ளது.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யும் 233 துணைமின் நிலையங்களில் ஒன்று கூட மழையின்காரணமாக இதுவரையிலும் OFF செய்துவைக்கப்படவில்லை. அதேபோல், இப்பகுதிகளுக்குமின்சாரத்தை எடுத்துச் செல்லும் 1,834 பீடர்களும்இயக்கத்தில் இருக்கின்றன எனவும் மாண்புமிகுஅமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் சென்னை தவிர்த்து, ஒவ்வொரு மின்பகிர்மான வட்டத்திலும் அவசரநிமித்தம் பணி செய்வதற்கு பகல் நேரத்தில் 6,560 பணியாளர்களும், இரவு நேரத்தில் பணி செய்வதற்கு2,400 பணியாளர்களும், சென்னை மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளில் பகல் நேரத்தில் பணிபுரிவதற்கு 1,440 பணியாளர்களும் இரவு நேரத்தில்பணி புரிவதற்கு 600 பணியாளர்களும  ஆகமொத்தம் 11,000 பணியாளர்கள் களத்தில்உள்ளனர்.

வடகிழக்கு பருவமழையினைஎதிர்கொள்வதற்கு கீழ்கண்ட உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளன எனவும் மாண்புமிகு அமைச்சர்அவர்கள் தெரிவித்தார்.

எனவே தமிழகத்தை பொறுத்தவரை மாண்புமிகுமுதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கைநடவடிக்கையின் காரணமாக நேற்று, நேற்று முன்தினம் எல்லாம் சென்னை உட்பட தமிழகம்முழுவதும் எந்தவிதமான மின் விநியோகத்தில்பாதிப்புகளும் இல்லாத அளவிற்கு சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றன.  அதற்குகாரணம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின்வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்டமுன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலமாக எந்தவிதமான பாதிப்பும் இல்லாத அளவிற்கு சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றன.

மின் பகிர்மான வட்டங்களில் தளவாடப்பொருட்கள் பற்றாக்குறை என்பது இல்லை, தேவையான அளவு இருப்பு உள்ளது.

இந்த வடகிழக்கு பருவமழைக் காலத்தில்மழையைப் பொருட்படுத்தாமல் மிக சிறப்பாகபணியாற்றக்கூடிய பணியாளர்கள், அலுவலர்கள்அனைவருக்கும் எனது சார்பாகவும், துறையின்சார்பாகவும் மனமார்ந்த நன்றியினையும், பாராட்டினையும் அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

பின்னர், மாண்புமிகு அமைச்சர் அவர்கள்தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர நுகர்வோர் மின் சேவை மையமானமின்னகத்தை ஆய்வு செய்தார்கள்.