புதுமைப்பெண்ணை காட்டும் படம் ‘பரிவர்த்தனை’

செந்தில்வேல் கதை வசனம் தயாரிப்பில் மணிபாரதி இயக்கத்தில் சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரி ஆகியோரின்நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்பரிவர்த்தனை‘. தந்தையின் வற்புறுத்துதலால் வேண்டாத வெறுப்பாகசுவாதியை திருமணம் செய்து கொள்கிறார் சுர்ஜித். பள்ளி பருவத்தில் சுர்ஜித்தை காதலித்த சுவாதியின் தோழிராஜேஸ்வரி, திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்கிறார். சுர்ஜித், ராஜேஸ்வரிஇவ்விருவரின் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை புரிந்து கொண்ட சுர்ஜித்தின் மனைவி சுவாதிஎடுக்கும் முடிவுதான் கதை. நாணயம் வெளிவராத காலத்தில் பண்டங்களை மாற்றிக் கொள்ளும் பர்வர்த்தனை, இப்போது பரிணாம வளர்ச்சி பெற்று மனித உறவுகளுக்கு மதிப்பளித்திருக்கிறது. திரைக்கதையை இருகூறுகளாக்கி ஒரு நேர் கோட்டின் புள்ளியில் சங்கமித்திருக்கிறார் இயக்குநர். சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரிஆகிய மூவரும் கதையின் சாராம்சத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள்.*****