அழகான குடும்ப கதை “அழகிய கண்ணே”

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் விஜயகுமார் இயக்கத்தில் பிரபலமான நகைச்சுவை பேச்சாளர் திண்டுக்கல்லியோனியின் மகன் லியோ சிவக்குமார், சஞ்சிதா செட்டி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்அழகியகண்ணே“. திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் லியோ சிவகுமார் திரைத்துறை இயக்குநராகும்முயற்சியில் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். எதிர் வீட்டில் இருக்கும் சஞ்சிதா செட்டி மென்பொருள் பொறியாளருக்கு படித்துக் கொண்டிருக்கின்றார். இருவரும் காதலர்கள். ஆனால் வெவ்வெரு சாதியினர். பெற்றோர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் சென்னைக்கு ஓடிவந்து திருமணம் செய்து ஒரு குழந்தைக்கும் தாய்தகப்பனாகிறார்கள். படம் முழுவதும் நல்ல வசதியுடன் அழகான குடும்பம் நடத்திவரும் இவர்கள் கடைசியில் என்ன ஆனார்கள்? என்பதுதான் கதை. படம் முழுவதும் எப்படி குடும்பம் அடத்த வேண்டும் என்பதை சொல்லிவந்த இயக்குநர் உச்சக்கட்ட காட்சியில் கோட்டைவிட்டது வருத்தத்திற்குரியது. கலை நயத்துடன் செதுக்கிய தேர் திரையில் ஊர்வலமாக உலா வருகிறது. உச்சக்கட்ட  காட்சியில் தேரை விறகுக்கடையில் எடைக்கு போட்டுவிட்டார்கள். சாதியை தூக்கி பிடிக்கும் இயக்குநர்கள் இருக்கும்வரை எத்தனை பாரதிகள் பிறந்து வந்தாலும் என்ன பயன்?