இளம் இயக்குநர்களின் திரை கனவுகளை நனவாக்கும் பொருட்டு, அவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், உதவி இயக்குநர்களின் சிறந்த கதைகளை குறும்படங்களாக தயாரிக்க ஆரம்பித்துள்ளது நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம். தயாரிப்பாளர் தாய் சரவணன் இந்த வகையில், தனது முதல் தயாரிப்பாக,
நான்கு குறுங்கதைகள் இணையும் சுவாரஸ்யமான ஹைப்பர் லிங்க் திரில்லராக, உருவாகியிருக்கும் Triquetra திரைப்படத்தை இயக்குநர் அசோக் இயக்கத்தில் உருவாக்கியுள்ளார்.
Triquetra என்பது வாழ்வுன் மூன்று முனைகளை குறிக்கும் சொல், நான்கு கதைகள் ஒன்றாக பயணிக்கும் ஹைப்பர் லிங்க் வகையில், கோயம்புத்தூரை பின்னணி களமாக கொண்டு, சுவாரஸ்ய திரில்லராக, இந்த குறும்படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை இயக்கியுள்ள இயக்குநர் அசோக் தமிழின் முன்னணி இயக்குநர் சுசீந்திரன் அவரகளிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். திரைப்படங்களில் உதவியாளர்களாக பணிபுரிந்த நண்பர்களை கொண்டு, இந்த திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். நடிகர்கள் முதல் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் வரை இப்படத்தில் பணிபுரிந்த அனைவரும் புதுமுகங்களே. சுவாரஸ்யம் நிரம்பி வழியும் இக்குறும்படத்தினை, நாளை 14 ஜூலை 2021 அன்று காலை 11 மணிக்கு, இயக்குநர்கள் சுசீந்திரன், சீனு ராமசாமி, துரை செந்தில்குமார், ராம் பிரகாஷ் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இணைந்து வெளியிடவுள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று ரசிகர்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
மக்கள் தொடர்பு: ஜான்சன்.