“ஓ”சையை ரசிக்க வைத்த படம் ‘காந்தாரா’

நடிகர் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து இயக்கிய படம் ‘காந்தாரா’. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னன் ஒருவன் கர்நாடகாவிலுள்ள மலைவாசி மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த மலையக நிலங்களை தானமாக கொடுத்து விடுகிறார். அந்த மன்னனின் வாரிசு ஒருவர், தனது மூதாதையர் தானமாக கொடுத்த அந்த மலை பிரதேச நிலங்களை திருப்பித்தர வேண்டுமென்று கேட்கிறார்.  அந்த மலைவாசி மக்களின் குல தெய்வமான ‘காந்தாரா’ அந்த மக்களையும் அவர்கள் வாழும் நிலப்பரப்புகளையும் எப்படி பாதுகாக்கிறது என்பதுதான் கதை. இயக்குநர் ரிஷிப் ஷெட்டி அந்த மலைப்பகுதியில்தான் பிறந்து வளர்ந்தவர். அந்த மலையின மக்களின் விவசாயத்தையும் வேட்டையாடுதலையும் தாம் சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவர் என்பதால் அதை தத்ரூபாக படத்தில் நடித்திருக்கின்றார். குலதெய்வ நம்பிக்கையை முன்னிலைப் படுத்தி சிறிதும் சினிமாத்தனம் இல்லாமல் திரைக்கதையை அமைத்திருப்பது பாராட்டதலுக்குறியது. காந்தாராவின் ‘ஓ’ என்று சப்தமிடும் ஓசை’ கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. உச்சக்கட்ட காட்சி வித்தியாசமாகவும் ரசிக்கும்படியும் அமைந்நிருக்கிறது.*********