சீகர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் “எக்ஸ்டிரீம்”. இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது: எக்ஸ்டிரீம் இந்தப்படம் பற்றி எந்த ஒரு விசயமும் தெரியாமல் தான் கலந்துகொண்டேன். முன்னோட்டம் பார்த்த போது, நாம் நினைக்காத விசயத்தை எல்லாம் செய்கிறார்களே என மகிழ்ச்சியாக உள்ளது. தலைப்பு வித்தியாசமாக உள்ளது. சீகர் பிக்சர்ஸ் நிறைய வெற்றியோடு பயணிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். எப்போதும் வெளியிலிருந்து, சினிமாக்காரர்களை கலாய்ப்பார்கள் ஆனால் நிஜத்தில் சினிமாக்காரர்களை விடக் கேவலமானவர்கள் இங்கு இருக்கிறார்கள். சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள். அவர் முதலில் அரசியல் செய்யட்டும் பின் விமர்சிக்கலாம். சினிமாவில் இருந்து நிறைய முதல்வர்கள் வந்துள்ளார்கள். சினிமாவிலிருந்து யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். இந்த நேரத்தில் சினிமாவுக்கு வந்திருக்கும் சீகர் பிக்சர்ஸுக்கு வாழ்த்துக்கள். இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.**********
இந்த படத்தில் சரவணன் மீனாட்சி தொடர் மற்றும் பிக்பாஸ் 6 வது சீசன் மூலம் பிரபலமான ரக்ஷிதா மஹாலஷ்மி மற்றும் சமீபத்தில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அயலி படத்தின் மூலம் பிரபலமான அபி நட்சத்ரா, நேரம் படத்தைத் தொடர்ந்து ரெஜினா படங்கள் உட்படச் சிறந்த படைப்புகளில் நடித்துவரும் ஆனந்த் நாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மற்றும் இவர்களுடன் அம்ரிதா ஷெல்டர், ராஜ்குமார், சிவம் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : D.J. பாலா சந்தானம் நடித்த பிஸ்கோத், காசேதான் கடவுளடா போன்ற படங்களுக்கு இசையமைத்த ராஜ் பிரதாப் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். டம்ளர் குத்து மற்றும் ஹிப்ஹாப் ஆதி நடித்த ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்த சிவ்ராக் சங்கர் நடனம் அமைக்கிறார். சண்டை பயிற்சியை சிவம் மேற்கொள்கிறார். மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்
தயாரிப்பு நிறுவனம் : SIEGER PICTURES தயாரிப்பாளர்கள் : கமலகுமாரி, ராஜ்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ராஜவேல் கிருஷ்ணா. இவரது முதல் படமான ” பிழை “சென்னை திடைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது படமான ” தூவல் ” உலகம் முழுக்க 40 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.