இந்த காலகட்டத்திற்கேற்ற படம் ‘சிக்லெட்ஸ்’ – கே.ராஜன்

எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம்சிக்லெட்ஸ்‘. இதில் நடிகர்கள் சாத்விக்வர்மா,  ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன்சிக்லெட்ஸ்படத்தின் மின்னோட்டத்தைப் பார்த்தோம்.அருமையாக இருக்கிறது. இந்த காலகட்டத்திற்கு தேவையான அற்புதமான படம். ‘அப்பாஅம்மாபிள்ளைகள் ஒருவருக்கொருவர் இணங்கி வாழ்வதை பற்றி பேசுகிறது. அப்பா அம்மாவின் பேச்சை பிள்ளைகள்கேட்கிறார்களா..? அல்லது பிள்ளைகளின் பேச்சை அப்பா அம்மா கேட்கிறார்களா.. ? என்ற பிரச்சினையை பற்றி இப்படம் பேசுகிறது. இது ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கின்ற விசயம். விஞ்ஞான வளர்ச்சியில் பல மென்பொருட்கள் வந்து வளர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அழிவையும் கொடுத்திருக்கிறது. உதாரணத்திற்கு ஆன்லைன்ரம்மியை சொல்லலாம்.*********

இன்றைக்கு நாம் அடுக்குமாடி குடியிருப்புக்களில் தான் வசிக்கிறோம். தாய் ஒரு அறை, தந்தை ஒரு அறை. பிள்ளைகள் ஒரு அறை. எல்லோரும் எப்பவாது ஒரு முறை தான் முற்றத்தில் ஒன்றாக இருப்பார்கள். அம்மாவுக்கு ஒன்னு.. அப்பாவுக்கு ஒன்னு.. பொண்ணுக்கு ஒன்னு.. பையனுக்கு ஒன்னு.. என ஆளாளுக்கு ஒரு கைத்தொலைபேசியை கையில் வைத்திருக்கிறார்கள். அழைப்புவந்தால் அம்மா சமையல் அறைக்கும், அப்பா படுக்கை அறையிலும் , பையன் தெருவுக்கும், பொண்ணு மொட்டை மாடிக்கும் சென்று பேசுகிறார்கள். யாருக்கும் யாருடனும் இணக்கம் இல்லை.

முன்பெல்லாம் அப்பா அம்மா.. பொண்ணு பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்கள். அப்போதெல்லாம் நிறைய கல்யாணம் நடந்தது. நல்ல பண்பாடாகவும் இருந்தது. ஆனால் இப்பொழுது அம்மா அப்ப. தங்களுடைய பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால் பொண்ணு திடீரென்று ஒருவரைஅழைத்துக் கொண்டு வந்து, ‘இவர்தான் என் கணவன்என்று அறிமுகப்படுத்துகிறார். அப்பாஅம்மாவிற்கு முன் கல்யாணம் செய்து கொண்டு வந்து நிற்கிறார்கள். இது வருத்தமாக தான் இருக்கிறது. இந்த வருத்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இப்படத்தின் நாயகன் அறிமுக நடிகர் போல் இல்லாமல், அனுபவிக்க நடிகர் போல் நீளமான வசனத்தை ஒரே மூச்சில் பேசி பிரமாதமாக நடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். இப்படத்தின் கதை பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் அற்புதமான விசயத்தை சொல்கிறது. அதனால் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும். மேலும் தற்போது நல்ல கதை இருந்தால் சின்ன பொருளாதர படங்களை ரசிகர்கள் வெற்றி பெற செய்கிறார்கள். ” என்றார்.