“தினசரி” திரைப்பட விமர்சனம்

சிந்தியா லூர்தே தயாரிப்பில் ஜி.சங்கர் இயக்கத்தில் ஶ்ரீகாந்த், சிந்தியா லூர்தே, எம்.ஆர்.ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன், வினோதினி, பிரேம்ஜி, சாம்ஸ், கே.பி.ஒய்.சரத்,  சாந்தினி தமிழரசன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தினசரி”. ஶ்ரீகாந்த் தனக்கு வரும் மனைவி அதிக சம்பளத்தில் வேலை பார்க்கும் பெண்ணாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருக்கு பெண் பார்க்க ஶ்ரீகாந்தின் அப்பா எம்.எஸ்.பாஸ்கர். அம்மா மீரா கிருஷ்ணன், அக்கா வினோதினி மூவரும் சிந்தியா லூர்தேவை பெண் பார்க்க செல்க்றார்கள். பெண் அழகாக இருப்பதால் மூவருக்கும் சிந்தியாவை பிடித்துவிடுகிறது. ஆனால் “திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லமாட்டேன் சம்மதமா?” என்று சிந்தியா கேட்கிறார். அதற்கு அம்மா மீரா கிருஷணன் சம்மதம் தெரிவிக்க ஶ்ரீகாந்துக்கும் சிந்தியாவுக்கும் திருமணம் நடக்கிறது. முதல் இரவின் போது ஶ்ரீகாந்த் சிந்தியாவிடம் “நீ ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மாதச்சம்பளம் வாங்குவதாக கல்யாண தரகர் சாம்ஸ் சொன்னான். நான் 50 ஆயிரம் மாதச் சம்பளம் வாங்குகிறேன். இருவரது சம்பளத்தையும் வைத்து வங்கியில் கடன் வாங்கி இதைவிட ஒரு பெரிய வீடு வாங்கவேண்டும்”  என்று கூறுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிந்தியா “திருமணத்திற்குப்பிறகு வேலைக்கு போக மாட்டேன் என்று உங்க அம்மாவிடம் நான் சொன்னதை அவர்கள் உங்களுக்கு சொல்லவில்லையா? “. என்று கேட்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஶ்ரீகாந்த் கோபத்துடன் முதல் இரவு அறையைவிட்டு வெளியே வந்துவிடுகிறார். பிறகு என்னாகிறது என்பதுதான் கதை. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனது சேமிப்புத்தொகையை ராதாரவி நடத்தும் சிட்பண்டில் போட்டு பிறகு பணத்தை மொத்தமாக இழந்து ஏமாந்து நிற்கும் ஶ்ரீகாந்த் ராதாரவிடம் கோபப்படும்போதும் பிறகு கெஞ்சுவதிலும் தனது நடிப்பில் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறார். வினோதியின் கலகலப்பான வெளிப்படையான யதார்த்தமான நடிப்பால் பார்வையாளர்களின் பாராட்டைப் பெறுகிறார். எம்.எஸ்.பாஸ்கரும் மீரா கிருஷ்ணனும் தங்களது வலுமைமிக்க காதல் நிகழ்வுகளை மகள் வினோதியினியிடம் சொல்கின்ற காட்சியில் பார்வையாளர்களின் விழிகளை நனைய வைக்கிறார்கள். அருமையன குணச்சித்திர நடிப்பு. குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கிறார் சிந்தியா லூர்தே. இசையும் ஒளிப்பதிவும் காதுக்கும் கண்ணுக்கும் விருந்தளிக்கிறது. குடுல்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய குதூகலமான குடும்பபடம் “தினசரி”. மதிப்பீடு 5க்கு 3.