ஸ்கை ஒண்டர் எண்டர்டெய்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் ஜெயலட்சுமி தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் படம் “என் காதலே” . லிங்கேஷ், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை லியா மற்றும் திவ்யா தாமஸ் இருவரும் நாயகியாகளாக நடித்துள்ளார். காட்பாடி ராஜன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் மதுசூதனன் ராவ், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மூடர்கூடம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த டோனி ஜான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.******
இசை – சாண்டி சாண்டெல்லோ தனி ஒருவன் படத்தின் மூலம் பிரபலமான கோபி கிருஷ்ணா இந்த படத்திற்கு எடிட்டிங்செய்துள்ளார். பாடல்கள்களை கபிலன், சந்துரு, இயக்குனர் ஜெயலட்சுமி ஆகியோர் எழுதியுள்ளனர். ஸ்வேதா மோகன், சைந்தவி, ஶ்ரீதர் சேனா, திலீப் வர்மன் ( மலேசியா ), அனிதா ஷேக் பாடல்களைபாடியுள்ளனர்.
கலை இயக்கம் – சசிகுமார் ஸ்டண்ட் – வீர் விஜய் நடனம் – பாபி மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ் தயாரிப்பு நிர்வாகம்– பாக்கியராஜ் தயாரிப்பு – Sky wanders Entertainment கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கியிருக்கிறார் – ஜெயலட்சுமி. தமிழ் திரையுலகில் தற்போது பெண் இயக்குனர்கள் தங்களது திறமைகளை திறம்பட செய்துவருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே அந்த வரிசையில் தற்போது ஜெயலட்சுமியும் இந்தபடத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
படம் பற்றி இயக்குனர் ஜெயலட்சுமி நம்மிடையே பகிர்ந்தவை..மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில் ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.உலக நாடுகள் முழுவதும் நம் தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எப்போதும்தனித்துவம் உண்டு. அதை பற்றி அறிந்து கொள்வதிலும் ஆராய்ச்சி செய்வதிலும் உலக நாடுகள்அனைத்தும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வரும் நாயகி லியாவிற்கு மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு இங்கு பல தடைகள்இருப்பதால் அவரது காதலை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறார். இறுதியில் லியாவின் ஆராய்ச்சி என்ன ஆனது அவர்கள் காதல் நிறைவேறியதா? இல்லையா? என்பதை உணர்ச்சிபூர்வமாக உருவாக்கியிருக்கிறோம். ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதுவிதமானஅனுபவத்தை கொடுக்கும். படப்பிடிப்பு கேரளா, காரைக்கால் நாகப்பட்டினம் மற்றும் பாண்டிச்சேரி போன்ற ஊர்களில் கடலும்கடல் சார்ந்த இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் மே மாதம் கோடை கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்கிறார் இயக்குனர் ஜெயலட்சுமி.