பூனே சர்வதேச திரைப்பட விழா இடிமுழக்கம் தேர்வு

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஸ்கைமன் பிலிம் இண்டர் நேஷ்னல் கலைமகன் முபாரக் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார், காயத்ரி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இடி முழக்கம்  திரைப்படம் பூனே இன்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஸ்டிவல் க்கு இந்தியா சினிமாவின் சார்பாக தேர்வாகியுள்ளது.* இடிமுழக்கம்திரைப்படம் வெளியீடுக்கு முன்னரே பிரமாண்டமான வரவேற்பை பெற்றுள்ளது.   இந்நிலையில் இத்திரைப்படத்தின் இடைமுழக்கத்தின் சத்தம் இன்னும் ஒரு படி மேலே சென்று திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு  பெருமளவு கூடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.*******

தென்மேற்கு பருவக்காற்று,  நீர்ப்பறவை, தர்மதுரை  போன்ற பல வெற்றி   திரைப்படங்களின் வரிசையில்    தனித்துவமான கதைக்கருவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை பார்வையாளர்கள் ஆவலுடன்எதிர்பார்க்கின்றனர். மேலும், இப்பொழுது ஃபில்ம் ஃபெஸ்டிவலுக்கு தேர்வாகி உள்ளதால் படக்குழுவினர்கள்அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இத்திரைப்படத்தை பற்றி பேசுகையில் சீனு ராமசாமி, “இடி முழக்கம்தேர்வானதில் எனக்கும், பட குழுவினர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி இது ஒரு சமுதாயத்தின் மகிழ்ச்சியும் ஆகும்விழாவிற்காக தகுதி பெற்ற திரைப்படம் உங்கள்  மனதிலும்  இடம்பெறுவதற்கான தகுதியையும் பெரும்என்பதில் எந்தவித  சந்தேகமும் இல்லை.  என்னுடைய எல்லா திரைப்படத்திற்கும் தருகின்ற ஆதரவை போலஇத்திரைப்படத்திற்கும்  உங்கள் அன்பும், ஆதரவும்   கிடைக்கும் என்று நம்புகிறேன்  என்றார்.

இப்படத்தில் NR ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்வரிகளை எழுதுகிறார். ஜீவிபிரகாஷ் குமார், காயத்திரி தவிர சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் மற்றும் பலதிறமையான நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.