மூன்று நாட்களில் 66,681 கோடி நஷ்டமடைந்த அதானி

இந்தியாவின் 2வது மிகப்பெரிய தொழில் அதிபரும் ஆசியாவின் 2வது மிகப்பெரிய தொழில் பணக்காரரான கெளதம் அதானியின் நிறுவன பங்குகளில் 3 நாட்டில் மட்டும் ரூ.66,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இவரது நிறுவனங்கள் மீதான பங்குகளில் கடந்த திங்கட்கிழமை அன்று திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது.* அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய 3 வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து பங்குகளில் வீழ்ச்சி தொடங்கியது. இவரது 6 நிறுவனத்தின் பங்குகள் 5% முதல் 25% வரை சரிந்தன. அதானிக்கு கடந்த 3 நாட்களில் ரூ. 66,681 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள எந்த ஒரு தொழில் அதிபரும் ஒரே வாரத்தில் இவ்வளவு தொகையை இழந்தது இல்லை. இதனால் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்னும் நிலையை அதானி இழந்திருக்கிறார். சர்வதேச அளவில் 15வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளார்.*