சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 23.07.2021 அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியை சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். வனிதா அகர்வால் வரவேற்புரை வழங்கினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கௌரி இரத்த தான முகாமை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். அப்போது “வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து” என திருக்குறளை மேற்கோள் காட்டி மாணவர்களிடத்தில் இரத்த தானத்தின் சிறப்பை விளக்கினார். சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் மதிவாணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இம்முகாமில் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையும் ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையும் கலந்து கொண்டு ரத்த தானத்தை பெற்றுச் சென்றனர்.