கேரளா மாநிலம் வல்லாச்சிரா பகுதியை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். இவர் தனது டீக்கடை முன்பு தனக்கு மணமகள் தேவை என்று போர்டு வைத்துள்ளார். மேலும் அதில் ஜாதி, மதம் பேதமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மனம் திறந்த உன்னி கிருஷ்ணன், “என் தலையில் ஒரு கட்டி இருந்ததை தொடர்ந்து நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். தற்போது முழுமையாக குணமடைந்து, அடுத்தக்கட்டத்திற்கு முன்னேற விரும்பினேன். கடந்த பிப்ரவரியில் வீட்டுக்கு அருகே ஒரு லாட்டரி கடை வைத்தேன். பிறகு அதை டீக்கடையாக விரிவுப்படுத்தினேன். தற்போது வியாபாரம் நன்றாக போகிறது.**எனக்கு ஒரு வாழ்க்கை துணை தேவைப்பட்டது. அதற்காக வழக்கம் போல் தரகரை பார்க்க எனக்கு பிடிக்கவில்லை. எனது ஜாதகத்தை வைத்து கொண்டு உறவினர்கள் வரன் பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த வரனும் அமையவில்லை. இதனல் என் டீக்கடை முன் போர்டு வைக்க முடிவெடுத்தேன்” என்றார். டீக்கடை முன் வைக்கப்பட்ட போர்டை உன்னியின் நண்பர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து நிறைய அழைப்புகள் அவருக்கு வர தொடங்கி உள்ளது. சில சமயங்களில் வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அழைப்புகள் வருகிறது. தற்போது என்னால் அழைப்புகளை எடுத்து பேசுவதற்கு கூட நேரமில்லை என்கிறார் உன்னி.