சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்‘. இதில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து இருப்பார். இதே படத்தில் ஜோசப் என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர் சோமு நடித்திருப்பார். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் நடிகர் விஷால் சோமுவைத் துரத்திக் கொண்டு செல்லும்படிஒரு காட்சி வந்திருக்கும். அந்தக் காட்சியின் இறுதியில் சோமு ஒரு லாரியில் அடிபட்டு இறந்து விடுவதைப்போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆபத்தானான இந்த சண்டைக் காட்சியில் சோமு டூப் இல்லாமல் அவரே நடித்திருப்பார். அவரை நடிகர் விஷால் வெகுவாக பாராட்டினார்***********
அதுமட்டுமல்லாமல் அன்று முதல் அவர் விஷாலின் தீவிர ரசிகராக மாறினார். ரசிகருக்கும் ஒருபடி மேலே போய்விஷாலைத் தன் சொந்த அண்ணனாகக் கருதி அண்ணா என்று அழைக்க ஆரம்பித்தார்.
படப்பிடிப்பின் போது சம்பந்தப்பட்ட அந்தக் காட்சியின் முடிவில் சோமு மிக அற்புதமாக நடித்து தன்னுடையஸ்டண்ட் வேலைகளையும் காட்டி அனைவரின் கைதட்டல்களையும் பரிசாகப் பெற்றார்.
படப்பிடிப்பிடத்தில்
கூட்டத்தில் இருந்தவர்கள் பாராட்டியது மட்டுமல்லாமல் நடிகர் விஷால் , “ யாருடா நீ இத்தனை நாள் எங்கடாஇருந்த? சினிமாவுல நீ நல்லா வருவ. உனக்கு ஒரு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு ” என்று தன் மனதாரப்பாராட்டி விட்டுச் சென்றிருக்கிறார்.
தன நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சோமு இப்பொழுது விஷாலின் அடுத்த படமான ‘லத்தி‘ மற்றும் ‘மார்க்ஆண்டனி ‘என இரு படங்களிலும் ஒரு நல்ல வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சோமு, 2017 இல் வெளியான ‘வடசென்னை‘ மற்றும் 2020 இல் வெளியான ‘ சார்பட்டா‘ படங்களிலும்சொல்லிக்கொள்ளும்படி சிறிய வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக நடிகர் சோமு சினிமாவுக்காகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டுதான்வந்துள்ளார். கராத்தே பயிற்சி, குதிரை ஏற்றம், நீச்சல், நடனம், நடிப்பு பயிற்சி அனைத்தையும் பயின்று தேர்ச்சிபெற்ற பின் தான் களத்திற்கு வந்துள்ளார்.
ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.மேலும் நடிகர் சோமு ‘பொன்னியின்செல்வனி‘ ல் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது நடக்காமலேபோய்விட்டது என்று கூறுகிறார்.
தன்னுடைய அடுத்த கட்ட முயற்சியாக எப்படியாவது இயக்குநர் வெற்றிமாறன் எடுக்கும் வாடிவாசல் படத்தில்ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து விட வேண்டும் என்று தீராத முயற்சி செய்து வருகிறார் .அதற்காக காலைமாலை ஜிம்முக்குச் சென்று தன்னுடைய உடம்பையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
ஒரு நல்ல குணச்சித்திர நடிகராக வேண்டும் என்பதையே தனது கனவாகக் கொண்டுள்ளார்.நடிகர் சோமுவின் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்!