அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சோனா. தொடர்ந்து கடந்த 20 வருடங்களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு கவர்ச்சி நடிகையாகமட்டுமல்லாமல், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தபோது திறமையை வெளிப்படுத்துபவராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார் சோனா. பத்து வருடங்களுக்கு முன்பே ‘கனிமொழி’ என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய சோனா, தற்போது ஸ்மோக் என்கிற வெப்சீரிஸை இயக்குவதன் மூலம் இயக்குநர் தொப்பியையும் அணிந்துள்ளார். ஷார்ட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது யுனிக் புரொடக்சன் மூலமாக ஒரு தயாரிப்பாளராகவும் இந்த வெப்சீரிஸை தயாரித்து நடிக்கும் சோனா இதற்கான கதையையும் தானே எழுதியுள்ளார்.*********