எஸ்.பி வேலுமணி க்கு கோவையில் பிரமாண்ட வரவேற்பு : ஆயிரகணக்கானோர் திரண்டிருந்ததால் பரபரப்பு

அதிமுகவின் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற கொறடாவுமான எஸ். பி. வேலுமணி  வீடு உட்பட அவருக்கு  தொடர்புடைய பல்வேறு இடங்களில் சில நாட்களுக்கு முன்பு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அவர் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், இன்று சென்னையிலிருந்து கோவைக்கு சென்றுள்ள எஸ்பி. வேலுமணி க்கு கோவை விமான நிலையத்தில் பல ஆயிரக்கணக்கான அஇஅதிமுக வினர் திரண்டு வந்து  பிரமாண்டமான முறையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் உரையாற்றிய எஸ். பி வேலுமணி,   திமுக அரசு,அரசியல் பழிவாங்கும் நோக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவி விட்டு   சோதனை நடத்தியுள்ளனர்.  என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போடப்பட்டுள்ள வழக்குகளை   சட்டரீதியாக எதிர் கொள்வேன். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது எனக்கு உறுதுணையாக
இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்
இவ்வாறு எஸ் பி. வேலுமணி தெரிவித்தார்.  அவரை ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஊர்வலமாக அவரது சொந்த ஊருக்கு அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை  நடைமுறைக்கு விரோதமாக  ஒருவரை நெருக்கிய படி பல ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டு  இருப்பதால்  கொரோனா தொற்று பரவக் கூடிய அபாயம் உருவாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது காவல்த்துறையினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.sp