கணம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகை அமலா, “இளமை காலத்தில் ஆதரித்த தமிழ் மக்களிடம் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அம்மாவாக வந்துருக்கிறேன். இப்படம் எனக்கு மிக மிக சிறப்பான படம். எங்கிருந்தாலும், எப்போது இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும், எந்தநேரமாக இருந்தாலும் இந்த படம் அனைவரையும் இணைக்கும். உங்களை சிரிக்க வைக்கும் அர்த்தமுள்ளபடம். ஆழமான அன்பை உணர்வுபூர்வமாக அழகாக கொடுத்திருக்கிறார் ஸ்ரீ கார்த்திக். அம்மாவாக இருக்கும் அனைவருக்கும், போராட்டங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் நெருக்கமாக இணைக்கும். இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையடைகிறேன்” என்றார்.*******
மேலும் அவர் பேசும்போது, “இந்த கதாபாத்திரம் கொடுத்ததற்கு ஸ்ரீ கார்த்திக்கு நன்றி. உங்கள் அம்மாதான் இந்த படத்திற்கு உத்வேகம் கொடுத்தார் என்று எனக்கு தெரியும். இந்தப்படத்தை அவரும் நம்முடன் பார்த்து நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன். எஸ். ஆர்.பிரபு, நீங்கள் ஒரு சிறப்பு வாய்ந்த தயாரிப்பாளர். உங்களுடைய எல்லா படங்களும் வெற்றி அடையவேண்டும் என்று வாழ்த்துகிறேன். சினிமா துறையில் இருக்கும் இளம் கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நீங்கள் ஆசீர்வாதமாக இருக்கிறீர்கள். இப்படத்தின் குழுவுடன் பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான் எந்த படம் பார்த்தாலும் பார்வையாளராக தான் பார்ப்பேன். வரும் செப்டம்பர் 9ஆம் தேதியும் இப்படத்தை பார்வையாளராக பார்க்க ஆவலாக உள்ளேன் என்றார்.
நடிகர் ஷர்வானந்த் பேசும்போது,
எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு ஏன் நீங்கள் தமிழில் நடிக்கவில்லை என்று கேட்டார்கள். கணம் படம்போன்று கதைக்காக தான் காத்து கொண்டிருந்தேன். நான் கதையை மட்டுமே நம்பி இருக்கிறேன். நமக்குஎப்போதும் எஸ். ஆர்.பிரபு போன்ற தயாரிப்பாளர்கள் தேவை. இப்படத்திற்கு தூண் போல் இருந்திருக்கிறார். ரவி ராகவேந்திரா போன்று அருமையான நடிகரை யாரும் பார்க்க முடியாது. நாசர் சார், ரீத்து வர்மாஇயற்கையாக நடிக்க கூடியவர்கள். இப்படத்தின் மூலம் சதீசும், ரமேஷும் நண்பர்களாககிடைத்திருக்கிறார்கள்.
அமலா மேடமை எப்போது பார்த்தாலும் அம்மாவாக தான் தோன்றும். இந்த படம் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்உடைய படம். இன்னும் 5 வருடங்களுக்கு இது போன்று படம் வருவது சாத்தியமில்லை. இந்தியாவின் சிறந்தஇயக்குநராக வருவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்றார்.
தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு பேசும்போது,
அருவி படத்தின் கதையை கேட்கும் போது திரையில் சிறப்பாக கொண்டு வரமுடியும் என்று நம்பிக்கை எப்படிவந்ததோ அதே நம்பிக்கை ஸ்ரீ கார்த்திக் கதை கூறும்போது வந்தது. இப்படத்தை பட்ஜெட் படமாக எடுப்பதைவிட நிறைய செலவு செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீயிடம் கூறினேன். அவரும் பெருந்தன்மையாகநீங்களே எடுங்கள் என்று கூறினார்.
மாயா படத்தில் இருந்தே ஒவ்வொரு கதையையும் ஷர்வானந்துக்கு அனுப்பி கொண்டே இருப்பேன். ஆனால், இந்த கதையை கேட்டு உடனே ஒப்புக் கொண்டார். அமலா மேடமிடம் இந்த கதையைக் கூறுவதற்கு தயக்கம்இருந்தது. இருந்தாலும், இந்த படத்தில் நடிப்பது பற்றி அவரே முடிவெடுக்கட்டும் என்று நினைத்தோம். அவர்வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஸ்ரீ ஒவ்வொரு காட்சிக்கும் மிகவும் மெனக்கெடுவார். தொழிற்துறையில் காலகட்டத்திற்கு ஏற்ப அதை புரிந்துகொண்டு அந்த துறையை மேம்படுத்தக் கூடியவர்கள் ஒரு சிலர் தான். அப்படி ஒருவர் தான் ஸ்ரீ கார்த்திக். படம்மட்டுமல்ல, பாடல்களுக்கும் உடன் இருந்து பணியாற்றினார். ஒவ்வொரு படம் பார்க்கும் போதும்பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களோ என்ற நடுக்கம் இருக்கும். ஆனால், இப்படத்தில் அது இல்லை.
டைம் ட்ராவல் மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்களும் ஒன்றாக பயணிக்கும் போது திருப்தியாக இருக்கும். நிறைய காட்சிகள் இல்லையென்றாலும், கதைக்கு முக்கியத்துவம் இருந்ததால் சரியாக புரிந்து கொண்டுநடித்து கொடுத்த ரீத்து வர்மாவிற்கு நன்றி.
சமீபமாக எங்கள் நிறுவன படங்கள் ஓடிடியில் வெளியாவதால் இனிமேல் இப்படித்தான் இருக்குமா? என்றுகேட்டார்கள். அதற்கு அப்படியில்லை என்று கூறினேன் என்றார்.