ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தா

நடிகை சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமானயசோதாஹரிஹரிஷ் இயக்கத்தில் இந்த வருடம்நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குக் கிடைத்து வரும் நல்ல வரவேற்பால் மகிழ்ச்சியடைந்துள்ள சண்டைப்பயிற்சியாளர் யானிக் பென், இந்த அதிதீவிரமான சண்டைக் காட்சிகளில் சமந்தா நடித்துள்ளது குறித்து பகிர்ந்துள்ளார். சமந்தாவின் தீவிரமான அர்ப்பணிப்பும் ஆர்வமும் மட்டுமே இந்த சண்டைக் காட்சிகளை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்றார்.*********

இதற்கு முன்பு யானிக் பென் சமந்தாவுடன்தி ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸில் இணைந்து பணியாற்றினார். தற்போது சிறந்த ஆக்‌ஷன் காட்சிகளுக்காக மீண்டும்யசோதாபடத்தில் ஒன்றிணைந்துள்ளனர்ஐகிடோ, கிக் பாக்ஸிங், ஜீத் குனே டோ, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் மணல் பயிற்சியில் நிபுணத்துவம் பெற்றவரானயானிக் பென் புகழ்பெற்ற ஹாலிவுட் படங்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட தெலுங்கு மற்றும் இந்தி படங்களுக்குசண்டைப் பயிற்சி கொடுத்துள்ளார். ‘ட்ரான்ஸ்போர்ட்டர் 3’, கிறிஸ்டோபர் நோலனின்இன்செப்ஷன்’, ‘டன்கிர்க்’, ஷாருக்கானின்ரயீஸ்’, சல்மான் கானின்டைகர் சிந்தா ஹை’, பவன் கல்யாணின்அத்தாரிண்டிகி தரேதி’, மகேஷ் பாபுவின் ’1- நேனோக்கடைன்’, அல்ல் அர்ஜூனின்பத்ரிநாத்’, சூர்யாவின்ஏழாம் அறிவுமற்றும் பலபடங்களில் பணிபுரிந்துள்ளார்.